Thursday, 26 September 2013

ரன்பிரின் அம்மாவுக்கு தீபிகாவை கண்டாலே எரிச்சலாக வருமாமே ranbeer mother deepika news

- 0 comments

ரன்பிரின் அம்மாவுக்கு தீபிகாவை கண்டாலே எரிச்சலாக வருமாமே
by abtamil

ரன்பிர் கபூரின் அம்மா நீத்துவுக்கு தீபிகா படுகோனேவை கண்டாலே பிடிக்காதாம். ரன்பிர் கபூர் நடிக்க வந்த புதிதில் தீபிகா படுகோனேவை காதலித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்ததற்கு ரன்பிரின் அம்மா நீத்து கபூர் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் ரன்பிரோ தானும், தீபிகாவும் பிரிந்ததற்கு தனது அம்மா காரணம் இல்லை என்று கூறினார். இந்நிலையில் நீத்து உண்மையை தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே ரன்பிர் சினிமாவில் நடிக்கத் துவங்கியபோது அவனுடைய ஒரு காதலியை பார்த்து நான் கோபப்படுவேன். அந்த பெண்ணால் என் மகன் சரியாகத் தூங்காமல் இருந்தான். ஒரு நடிகர் புத்துணர்வாகத் தெரிய வேண்டும் என்றால் நல்ல தூக்கம் வேண்டும் அல்லவா என்று நீத்து தெரிவித்துள்ளார். அவர் மறைமுகமாக தீபிகாவைத் தான் தெரிவித்துள்ளார்.

ஓவர் அதிகாரம் தீபிகா ரன்பிரை காதலித்த நேரத்தில் அவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்குவாராம். ரன்பிர் வெளியே சென்றுவிட்டாலும் தீபிகா அவரது வீட்டில் இருந்து கொண்டு வேலையாட்களை ஓவராக அதிகாரம் செய்வாராம். ஏதோ வீட்டின் எஜமானி போன்று தீபிகா அதிகாரம் செய்தது நீத்துவுக்கு சுத்தமாகப்

மகனுக்காக தீபிகாவை கண்டாலே நீத்துவுக்கு பிடிக்காவிட்டாலும் மகனுக்காக அதை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார்.

பிரிந்ததில் மகிழ்ச்சி ரன்பிர் தீபிகாவை விட்டு பிரிந்ததில் நீத்துவுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

டோனிக்கு பாடல்கள் சி.டி.யை பரிசளித்த இளம் பாடகர் Dhoni gifted CD by upcoming singer

- 0 comments

டோனிக்கு பாடல்கள் சி.டி.யை பரிசளித்த இளம் பாடகர் Dhoni gifted CD by upcoming singer
Tamil NewsToday, 05:30

ராஞ்சி, செப். 26-

கடந்த 2002ம் ஆண்டில் பள்ளி மாணவனாக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர் ரோகன் டியோ பதக். 22 வயது வாலிபரான இவர், இப்போது வளர்ந்துவரும் ஒரு பாடகராக விளங்குகின்றார்.

இவர் தனது இசையமைப்பில் கிரிக்கெட் குறித்த இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று ஜேஎஸ்சிஏ மைதானத்தில் கேப்டன் டோனி இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய ஒரு நாள் போட்டிக்குப் பின்னர் அவரது ஆட்டத்திறனைப் புகழ்ந்து பாராட்டியதாகும்.

மற்றொன்று டீம் இந்தியா அணியினர் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியபோது இந்த அணி குறித்து பாடியதாகும். இந்த இரண்டு பாடல்களும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பாராட்டுகளைப் பெற்றன.

ஜூலை மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின்போது இந்தப் பாடல்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியினரைப் புகழ்ந்து பாடிய மற்றொரு பாடல் இணையதளத்தில் யூ டியூபில் வெளிவந்துள்ளது.

ராஞ்சியில் ஹர்மு காலனியில் இருக்கும் கேப்டன் டோனியின் வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரோகன் சென்றுள்ளார். தனது பாடல்கள் மூன்றும் அடங்கிய சிடி ஒன்றினை டோனிக்கு அவர் பரிசளித்தபோது டோனி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்திய அணி பற்றி தான் பாடியுள்ள மூன்றாவது பாடல் குறித்து அவரது கருத்தை தனக்குத் தெரிவிக்குமாறு கேட்டதற்கு டோனி சம்மதித்ததாகக் கூறும் ரோகன், அவரது எளிமையைப் பற்றி வானளாவப் புகழ்கிறார். 
...
Show commentsOpen link

[Continue reading...]

சீனாவில் கற்பழிப்பு வழக்கில் ராணுவத் தளபதியின் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை China court jails generals son in sexual harassment

- 0 comments

சீனாவில் கற்பழிப்பு வழக்கில் ராணுவத் தளபதியின் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை China court jails generals son in sexual harassment
Tamil NewsToday, 05:30

பெய்ஜிங், செப். 26-

சீனாவின் ராணுவத்தளபதியாக இருப்பவர் லீ ஷூவாங்ஜியாங். இவர் நாட்டுப்பற்று மிக்க பாடல் ஒன்றை எழுதி சீன மக்களால் நன்கு அறியப்பட்டவர் ஆவர். இவரது மனைவி மெங் ஜீயும் சீன ராணுவத்தில் ஒரு சிறந்த பாடகராக விளங்குகிறார். 

இவர்களது 17 வயது மகன் லீ தியானி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் மது அருந்தியிருக்கிறார். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த பெண் ஒருவரை கற்பழித்திருக்கின்றனர். 

இதுகுறித்த வழக்கு பெய்ஜிங்கின் மேற்குப்பகுதியில் உள்ள ஹைதியான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது லீ தியானி அந்த பெண் ஒரு விலை மாதர். அவருடன் எந்த ஒரு தகாத உறவும் நான் வைத்துக்கொள்ள வில்லை என்று வாதிட்டார். 

இருந்தும், அவர்கள் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது நிரூபணம் ஆனது. இதையடுத்து ஹைதியான் நீதிமன்றம், லீ தியானிக்கு 10 வருட சிறை தண்டனையும், மற்ற நால்வருக்கு 3 வருடம் முதல் 12 வருடம் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு முறைகேடாக வாகனம் ஓட்டியது, வாகனத்திற்கு வழிவிடாமல் இருந்ததாக ஒரு ஜோடியினை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில், லீ தியானி வாகனம் ஓட்ட நீதிமன்றம் 1 வருடம் தடை விதித்திருந்தது. 

இச்சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. பின்னர் லீ தியானியின் தந்தையான ராணுவத்தளபதி லீ ஷூவாங்ஜியாங், அந்த தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 
...
Show commentsOpen link

[Continue reading...]

அமலாபாலுடன் அதிருப்தி கொண்ட விஜய்:கடும் அதிர்ச்சியில் நடிகை vijay and amalapaul

- 0 comments

அமலாபாலுடன் அதிருப்தி கொண்ட விஜய்:கடும் அதிர்ச்சியில் நடிகை

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, 10:04

விஜய்யின் நட்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார் அமலா பால்.இப்போதெல்லாம் ஒரே ஹீரோயினை அடுத்தடுத்த படங்களுக்கு டாப் ஹீரோக்கள் ரிபீட் செய்வதில்லை. இதில் விஜய் மட்டும் விதிவிலக்கு. தொடர்ந்து இவரது படங்களில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அதையடுத்து அசின். இப்போது காஜல் அகர்வால். ஒரே ஹீரோயினை தனது படங்களில் விஜய் தொடர ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.

அது நட்பு. குறிப்பிட்ட ஹீரோயினுடன் விஜய்க்கு நட்பு ஏற்பட வேண்டும். அந்த ஹீரோயின் எந்த படத்துக்கு கால்ஷீட் சொதப்பினாலும் விஜய்யின் படத்தில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்களாலேயே முன் குறிப்பிட்ட நடிகைகள் விஜய்யுடன் தொடர்ந்து நடித்துள்ளனர். அந்த வகையில் தலைவா படத்தில் நடித்த அமலா பாலுக்கு லக் அடிக்குமா என அவரது அபிமானிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அடிக்கவில்லை. இதனால் அமலா ஏமாற்றம் அடைந்துள்ளாராம்.

தலைவா படத்தில் ஹீரோயினாக நடிக்க அமலாபாலை ஒப்பந்தம் செய்தவுடன் விஜய் தனது அதிருப்தியை இயக்குனர் விஜய்யிடம் தெரிவித்தாராம். ஆனால் இயக்குனர் விஜய், நடிகர் விஜய்யை சமாதானப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தாராம். இந்த விஷயம் இப்பொழுதுதான் அமலாபாலுக்கு தெரியவந்துள்ளது. எனவே மீண்டும் ஒருமுறை தனக்கு விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டதால் இருக்கிறார் அமலாபால்.

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger