
ஆனால், தற்போது, அஜீத்துடன் டூயட் பாட சான்ஸ் கிடைக்கவில்லை என்றாலும், அவர் படத்தில் அவருக்கு தங்கையாகவோ அல்லது மகளோகவோ நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்று தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த செய்தி அஜீத் ரசிகர்களை சூடேத்தி விட்டுள்ளாதாம்.
காரணம், தற்போது 42 வயதே ஆகும், அஜீத்துக்கு 6 வயதில் மகள் அனோஷ்கா இருக்கிறார். இந்நிலையில், 20 வயதுடைய நஸ்ரியா எப்படி அவருக்கு மகளாக நடிக்க முடியும். அப்படி இவர் நினைப்பதறகு அஜீத் என்ன அப்பா வயது கொண்ட நடிகரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதையடுத்து சமூகவளைதளங்களில் அஜீத் ரசிகர்கள் நஸ்ரியாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால், ஏற்கனவே தொப்புள் சர்ச்சையில் சிக்கிய நஸ்ரியா, இப்போது தேவையே இல்லாமல் அஜீத் ரசிகர்களால் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறார்.