‘சிங்கம் 2’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை படக் குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது சூர்யா பேசியதாவது,
“எனக்கு இப்போது ஒரு வெற்றி தேவைப்பட்டது. எனவே இந்த படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் நினைத்ததை விடவும் பெரிய வெற்றியை தந்திருக்கிறார்கள். நன்றி.
‘சிங்கம் 2’ என்று தொடங்கியதுமே பலவாறாக பேசினார்கள். சிங்கத்தில் எல்லாம் வந்துவிட்டது. இனிமேல் என்ன இருக்கிறது? ஒரு படம் வெற்றி பெற்றால் போதாதா இன்னொன்று எதற்கு? சிங்கம் 2 க்கு என்ன கதை இருக்க போகிறது ஏதோ ஒப்பேற்றப் போகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள்.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு போகும் போதும் படப்பிடிப்பின் போதும் எனக்கு பயமாக இருக்கும். நம்மை நம்பி ஆயிரம் பேர் திரையரங்கில் வந்து உட்கார்கிரார்கள். அவர்களை படம் திருப்தி செய்யுமா?