Wednesday 10 July 2013

சிங்கம் 2 வெற்றி எனக்கு தேவைப்பட்ட வெற்றி – சூர்யா

‘சிங்கம் 2’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை படக் குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது சூர்யா பேசியதாவது,
“எனக்கு   இப்போது ஒரு வெற்றி தேவைப்பட்டது.  எனவே இந்த படத்தை நான் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.  நான் நினைத்ததை விடவும் பெரிய வெற்றியை தந்திருக்கிறார்கள். நன்றி.
‘சிங்கம் 2’ என்று தொடங்கியதுமே பலவாறாக பேசினார்கள். சிங்கத்தில் எல்லாம் வந்துவிட்டது. இனிமேல் என்ன இருக்கிறது?  ஒரு படம் வெற்றி பெற்றால் போதாதா இன்னொன்று எதற்கு? சிங்கம் 2 க்கு என்ன கதை இருக்க போகிறது ஏதோ ஒப்பேற்றப் போகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள்.
ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு போகும் போதும் படப்பிடிப்பின் போதும் எனக்கு பயமாக இருக்கும். நம்மை நம்பி ஆயிரம் பேர் திரையரங்கில் வந்து உட்கார்கிரார்கள். அவர்களை படம் திருப்தி செய்யுமா?
இந்தக் கவலையும் பயமும் தினம் தினம் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. இன்று நல்ல செய்தி கிடைத்து இருக்கிறது. இப்போது இதற்காக உழைத்த அனைவரையும் நினைத்துப் பார்க்கிறேன். எல்லோருமே இதை தன் சொந்தப் படம் போலவே நினைத்து உழைத்தார்கள்.
டைரக்டர் சொன்ன மாதிரி இந்தப் படத்துக்கு பல பேருடைய வாழ்த்து வந்து கொண்டே இருந்தது. அதுதான் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. பெயர் சொல்ல விரும்பவில்லை பல உயர் போலீஸ் அதிகாரிகள் படத்தைப் பாராட்டி கூறினார்கள். எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
எனக்கு பல பெருமைகளைத் தேடிக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஹரி சார். அவருக்கு நன்றி. என் அப்பாவிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. அப்படி அப்பா சொன்னதே இல்லை. இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் அப்பா  ”ரொம்ப பெருமையா இருக்குபா” என்று எனக்கு மெசேஜ் கொடுத்திருந்தார்.
இந்த 12 ஆண்டுகளில் ஜோ என் படத்தை பெரிதாகப் பாராட்டியதில்லை. ‘சிங்கம் 2’ படத்தைப் பார்த்துவிட்டு கைத்தட்டி பாராட்டினார். இதை எல்லாம் பெற்றுக் கொடுத்தவர் டைரக்டர் ஹரி. நான் எத்தனையோ பேரிடம் பணியாற்றிய போதும் ஹரி எனக்கு ஸ்பெஷல் தான்.
ஒரு டைரக்டர் படத்தில் நடிப்பவர்கள் பற்றி எவ்வளவு பொறுப்பாக இருக்க முடியும். கால்ஷீட் தேதி குறிப்பிடும் போதே நடிகர்களின் சில முக்கியமான தேதிகளையும் குறித்து கொள்பவர். இத்தனை பரபரப்பான படப்பிடிப்பு நேரங்களில் கூட என் குடும்பம் பற்றி புரிந்து என் பிறந்த நாள், என் திருமண நாள், குழந்தைகள் பிறந்த நாள் என்றைக்கு என்று பார்த்து விடுமுறை கொடுத்து அன்று ஊருக்குப் போய் வரச் சொல்வார்.
இதை எல்லாம் பார்க்கும் போது அவர் மேல் எனக்கு மரியாதை இன்னமும் கூடுகிறது. ஒவ்வொரு நாளும் அவர் இந்தப் படத்துக்காக உழைத்த உழைப்பு,காட்டிய நேர்மை, நேர்த்தி வேகம் கொஞ்ச நஞ்சமல்ல. சில காலம் இந்தப் படத்தையே தன் உலகமாக வாழ்ந்தார். அதற்குதான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.அவர் என்னை தன் சகோதரர் என்றார், அது பெருமையாக இருக்கிறது,” என்று சூர்யா பேசினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger