Wednesday, 10 July 2013

திவ்யா மற்றும் அவரது தாயாருக்கு கவுன்சிலிங் - ஐகோர்ட்டு உத்தரவு

தர்மபுரியில் காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன் மரணத்தையடுத்து திவ்யா மற்றும் அவரது தாயாருக்கு கவுன்சிலிங் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  உத்தரவு
திவ்யா மற்றும் அவரது தாயார், சகோதரருக்கு டாக்டர். ரவிசங்கர் தலைமையில் மருத்துவக் குழு, 10 அமர்வுகளில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் ஆலோசனை வழங்க வேண்டும். இது குறித்து அறிக்கையை 24–ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி கேட்டு அவரது நெருங்கிய உறவினர்களும், திவ்யா தரப்பிலும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம். அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த ஊர்வலத்தில் எத்தனை பேர் கலந்து கொள்ளவேண்டும்? என்பதை குறிப்பிட்டு தகுந்த முடிவுகளை கலெக்டர் எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியிருந்தது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி திவ்யாவிற்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் சம்மன் அனுப்பி உள்ளார். அந்த சம்மனில் ஐகோர்ட்டு உத்தரப்படி கவுன்சிலிங் பெற நீங்கள் சம்மதிக்கிறீர்களா? அல்லது ஏதாவது ஆட்சேபனை உள்ளதா? என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல் இளவரசனின் குடும்பத்தினருக்கு 2 சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் ஒரு சம்மன் கிராம நிர்வாக அலுவலர் மூலம் அனுப்பபட்டு இருக்கிறது அதில், உங்கள் குடும்பத்துக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலங் நடத்த இருக்கிறோம். உங்களுக்கு எப்போது கவுன்சிலங் வேண்டும், அதற்கான நேரத்தை தெரிவியுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே போல் கிராம நிர்வாக அலுவலர் மூலம் டாக்டருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ளது. அதில் இளவரசன் குடும்பத்தினர் அழைத்தவுடன் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே போல் மாவட்ட காவல் துறை சார்பில் மற்றொரு சம்மன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:–
இளவரசன் மரணம் குறித்த விசாரணை நடத்த அரூர் டி.எஸ்.பி. சம்பத்குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவரை வேண்டாம் என்று நீங்கள் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. எனவே அந்த அதிகாரி ஏன் விசாரணை நடத்த வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என எழுத்து மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger