Saturday, 16 November 2013

பாரத ரத்னா விருதுக்கு தகுதியான வீரர் "தியான் சந்த்" diyan santh hockey player

- 0 comments

இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்பில்லை!

உண்மையில் விளையட்டு துறைக்கு என்று ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமானால்! அதற்கு இவரை தான் முதல் ஆளாக பரிசீலிக்க வேண்டும்!


*1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் 'நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள்! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார்!' என்று சொல்லி இருக்கிறார்!

*சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும்! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே!' என எழுதின!

*ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!

*1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது!

*ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகிறார்! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை!

*ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள்!

*ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

*தியான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன், ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார்! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார்!

*சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார்.


இவர் பெயர் "தியான் சந்த்".

பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கபட்டது. விளையாட்டு அமைச்சகமும் இவருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு "பாரத் ரத்னா" கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு மறுத்துவிட்டது.


நன்றி : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா.

[Continue reading...]

Dony Blair in Elam ராஜபக்சேவின் வயிற்றில் புளியைக் கரைத்த நாள்

- 0 comments

created by tamil blogs

தமிழகத்தில் ஈழம் பற்றி பேசுபவர்கள் , பேஸ்புக் போராளிகள் எந்த அளவுக்கு யதார்த்தம் குறித்த புரிதல் உள்ளவர்கள் என்பது குறித்து எனக்கு பெருத்த ஐயம் உண்டு . தமிழ்நாட்டில் முட்டுசந்தில் நின்று மூன்று பேர் கத்துவது போன்ற உப்புக்கு பெறாத நிகழ்வுகளையெல்லாம் ராஜபக்சே பயந்து விடுவது போல மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள் . எனக்குத் தெரிந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ராஜபக்சேவின் வயிற்றில் புளியைக் கரைத்த நாள் இன்றாகத் தான் இருக்கும் .

இங்கிலாந்து பிரதமர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் . இது எவ்வளவு பெரிய நிகழ்வு ! சர்வதேச அளவில் ஏதாவது அழுத்தம் கிடைத்து ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் அதன் தொடக்கமாக இது அமைவதற்கு வாய்ப்பு அதிகம் .நம்பிக்கை துளிர்க்கிறது . நல்லதே நடக்கட்டும்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger