Monday 30 December 2013

தமிழர் பகுதியில் தோண்டியெடுத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சீனாவுக்கு அனுப்பி வைத்தது ஏன்? Skull dug up in Tamil areas tiled sent to China to research and why

- 0 comments

Img தமிழர் பகுதியில் தோண்டியெடுத்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய சீனாவுக்கு அனுப்பி வைத்தது ஏன்? Skull dug up in Tamil areas tiled sent to China to research and why

கொழும்பு, டிச.30-

இலங்கையின் திருக்கேத்தீஸ்வரம் பகுதியில் கடந்த 20ஆம் தேதி குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டிய போது குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கிடைத்தன. இது உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை கொடுத்தது.

இலங்கை அரசு இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. மண்டை ஓடுகளை தொடர்ந்து தோண்டி எடுக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அதிர்ச்சி திருப்பமாக மண்டை ஓடுகளை தோண்டும் பணியை நேற்று அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி திருப்பமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ள மண்டை ஒடுகளை தடவியல் துறை ஆய்வுக்காக சீனாவிற்கு அனுப்பியுள்ளது ராஜபக்சே அரசு. இது உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது இறந்த தமிழர்களின் உடலை புதைப்பதற்கு ஏதுவாக சீனா பல ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. போரின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை சீனா உதவியுடன் இலங்கை அழித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளும் சீனாவிற்கு அனுப்பப்படுவது உண்மையை மூடி மறைக்கும் முயற்சி என குற்றம்டசாட்டப்படுகிறது.

எனவே இது தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
...

[Continue reading...]

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்: கோமா நிலையில் சிகிச்சை gang attacks on Indian students in Melbourne went into a coma

- 0 comments

gang attacks on Indian students in Melbourne went into a coma ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்: கோமா நிலையில் சிகிச்சை gang attacks on Indian students in Melbourne went into a coma

புதுடெல்லி, டிச.30-

ஆஸ்திரோலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை, பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல்  தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்வீந்தர் சிங் என்ற அந்த மாணவர் தனது இரு நண்பர்களுடன் அங்குள்ள பிர்ரா ரங் பூங்காவின் நடைபாதையில் நின்றிருந்த போது ஆப்பிரிக்கர் போல் தோற்றம் கொண்ட 8 பேர் உள்பட ஒரு பெண்ணும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

சிங்கின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரிமாரியாக தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பர்சை திருடிச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கோமா நிலையில் உள்ளதாகவும், ஆனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger