gang attacks on Indian students in Melbourne went into a coma ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது தாக்குதல்: கோமா நிலையில் சிகிச்சை gang attacks on Indian students in Melbourne went into a coma
புதுடெல்லி, டிச.30-
ஆஸ்திரோலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவரை, பெண் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மன்வீந்தர் சிங் என்ற அந்த மாணவர் தனது இரு நண்பர்களுடன் அங்குள்ள பிர்ரா ரங் பூங்காவின் நடைபாதையில் நின்றிருந்த போது ஆப்பிரிக்கர் போல் தோற்றம் கொண்ட 8 பேர் உள்பட ஒரு பெண்ணும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
சிங்கின் முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரிமாரியாக தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பர்சை திருடிச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கோமா நிலையில் உள்ளதாகவும், ஆனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?