Saturday, 13 December 2014

இணையத்தில் மனதைத் தொட்ட வரிகள் Touching line's

- 0 comments

மனதைத் தொட்ட வரிகள்

1. பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள
வேண்டாம். உழைத்தால் பணம்
நிறைய சம்பாதிக்கலாம்.

2. துன்பம் துன்பம்
என்று சலித்துக் கொண்டு என்ன
பயன்? உடம்பிலிருக்கும்
ஒன்பது ஓட்டைகளோடு அதுவும்
பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு :
வாழ்வுக்கு நியாமும்,
நெஞ்சிற்கு நிம்மதியும்
கிடைக்கும்.

3. உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.

4. ஒரு தாய் தன்
மகனை மனிதனாக்க
இருபது வருடங்களாகிறது.
அவனை மற்றொரு பெண்
இருபதே நிமிடங்களில்
முட்டாளாக்கி விடுகிறாள்.

5. பெண்களில்
இரண்டே பிரிவினர் தாம்
இருக்கிறார்கள்.
ஒன்று அழகானவர்கள்.
மற்றொன்று அழகானவர்கள்
என்று நம்பிக் கொண்டிருப்பவர்க
ள்.

6. அழகான பெண்களுக்குப்
பிறக்கும்போதே நிச்சய தார்த்தம்
நடந்து விடுகிறது. (யாருங்க
அது

7. பெண் இல்லாத வீடும்,
வீடு இல்லாத பெண்ணும்
மதிப்பு இல்லாதவை!!!!!

8. ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல
முடியாது.

9. நீங்கள் போருக்குச்
செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச்
செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்
ஒரு பெண்ணை மனைவியாக
ஏற்கும்
போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

10. தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்
மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

11.
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக
எரிந்தாலும் அதன் அடியில்
சற்று இருள் இருக்கத்தான்
செய்யும்

12. சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான்
வாழ்கிறான்

13. வெற்றியின் ரகசியம் - எடுத்த
காரியத்தில் நிலையாக
இருத்தல்.

14. பணம் இருந்தால்
உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால்
யாருக்கும் உன்னைத்
தெரியாது.

15. மது உள்ளே சென்றால்
அறிவு வெளி செல்கிறது.
நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும்
பேசாதே!

16. அதிர்ஷ்டத்திற்காகக்
காத்திருப்பதும் சாவுக்காக்
காத்திருப்பதும் ஒன்றே!

17. செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பது இல்லை!

18. நாக்கு கொடிய மிருகம்.
அதை எப்போதும் கட்டியே வை!

19. பறக்க விரும்புபவனால் படர
முடியாது.

20. மகிழ்ச்சியான
வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல,
தடைகளை வெற்றி கொண்டு வாழும்
வாழக்கை.

21. ஒரு கதவு மூடப்படும்
போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட
கதவையே பார்த்துக்
கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்.

[Continue reading...]

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள்

- 0 comments

  திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.
5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.
9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.
பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger