Sunday, 15 December 2013

ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: பிரான்சை வீழ்த்தி ஜெர்மனி 6 வது முறையாக கோப்பையை தட்டிசென்றது Germany beat France record sixth world title

- 0 comments

Img ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: பிரான்சை வீழ்த்தி ஜெர்மனி 6 வது முறையாக கோப்பையை தட்டிசென்றது Germany beat France record sixth world title

புதுடெல்லி, டிச. 16-

ஹீரோ ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதியாட்டம் புதுடெல்லி மேஜர் தியான் சந்த் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனும், 5 முறையாக உலகக்கோப்பையை வென்ற ஜெர்மன் அணியானது, பிரான்ஸ் அணியுடன் மோதியது.  

இதில் ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனி வீரர் நிக்லஸ் வெல்லென் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து 44, 46 வது நிமிடங்களில் அடுத்தடுத்து அவர் இரண்டு கோல்களை அடித்தார். இடையே பிரெஞ்சு வீரர்களும் இரு கோல்கள் போட்டனர்.

பின்னர் கடைசி நேர ஆட்டத்தில் ஜெர்மனியின் ஜொனாஸ் கோமாலும், கிறிஸ்டோபர் ரூரும் தலா ஒரு கோல் போட்டனர். இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 5-2 என்ற புள்ளிகளில் ஜெர்மனி அணியினர் பிரான்சை வெற்றி கண்டனர். இந்த வெற்றியை அடுத்து ஜெர்மனி அணியினர் 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger