Thursday, 3 October 2013

லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: அப்துல்கலாம் அறிவுரை Abdulkalam advice students have to work hard to achieve goal

- 0 comments

லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: அப்துல்கலாம் அறிவுரை Abdulkalam advice students have to work hard to achieve goal

Tamil NewsYesterday,

சேலம், அக்.4-

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுடன் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசியதாவது:-

பசுமை நிறைந்த மரங்கள் இருப்பதினால் மட்டுமே தூய்மையான காற்று நமக்கு கிடைக்கிறது. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு மரக்கன்றுகளை நாம் நட்டுவந்தால் பசுமையான நாடாக நம்நாடு மாறும். மாணவர்கள் படித்துமுடித்த பிறகு நாம் படித்த பள்ளியையும், நமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் மறந்துவிடக்கூடாது.

ஒவ்வொரு இளைஞர்களும் கனவு காண வேண்டும். அதாவது உறக்கத்தில் வருவது இல்லை கனவு! உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு!. வாழ்வில் வெற்றிடைய ஒவ்வொருவரும் இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும். அதாவது மிகவும் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும். மற்றொன்று கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதிவேண்டும். தோல்விக்கு விடை கொடுத்து லட்சியத்தை அடைய மாணவர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.

1930-40 ல் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான் 5-ம் வகுப்பு படித்தேன். எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர். அப்போது பள்ளியின் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதை காணமுடியும். அந்த ஆசிரியரின் முகத்திலே அறிவு ஒளி தெரியும். தூய்மை பிரதிபலிக்கும். இதற்கு மேல் மாணவனுக்கு என்ன தேவை. நல்ல ஆசிரியர் கிடைத்துவிட்டால் மாணவர்கள் கல்வியிலும், வாழ்விலும் வெற்றிபெறலாம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள், மாணவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்லுறவு இருப்பது அவசியம். கல்வி நிறுவனங்கள் என்பது தொழில் மையமாக இருக்கக்கூடாது.

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் பரவூர் கிராமத்தில் நடந்த விஞ்ஞானம் மூலம் மக்களை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அந்த கிராமத்தில் 2,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்க வைப்பதாக அக்கிராமத்தில் உள்ளவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். அப்போது 12 மாணவர்களை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு மாணவனிடம் கேள்வி கேட்டேன்.

அதில், எனக்கு உளவியல் படிக்க ஆசை என்றும், ஆனால் எனது பெற்றோர்கள் தொழிற்கல்வி படிக்க ஆசைப்படுவதாகவும் கூறினான். இதற்கு நான், பெற்றோர் உன்னை நேசிப்பதால் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறினேன். உடனே கூட்டத்தில் இருந்த அந்த மாணவனின் பெற்றோர் எழுந்து நின்று, மகன் விருப்பப்படியே உளவியல் படிக்க வைப்பதாக தெரிவித்தார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால், அன்பும், அரவணைப்பும் மாணவர்களுக்கு கட்டாயம் தேவை.

இன்னமும், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மன உறுதியுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக வேண்டும் கோர்ட்டு உத்தரவு Defamation case Actress Anjali must appear directly court order

- 0 comments

டைரக்டர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கு: நடிகை அஞ்சலி நேரில் ஆஜராக வேண்டும் கோர்ட்டு உத்தரவு Defamation case Actress Anjali must appear directly court order

Tamil NewsYesterday, 05:30

எங்கேயும் எப்போதும், சேட்டை உள்பட பல தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறியிருந்தார்.

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்றும் கூறி டைரக்டர் களஞ்சியம் சார்பில் சைதாப்பேட்டை பெருநகர 17-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு ராஜலட்சுமி முன் வந்தது. அப்போது நடிகை அஞ்சலி தரப்பு வக்கீல் முகுந்தன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், நடிகை அஞ்சலி இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். அதற்கு டைரக்டர் களஞ்சியம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு நகலை பெற நடிகை அஞ்சலி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

ஆண்களை பெண்கள் எப்படியெல்லாம் தவிக்கவிடுவாங்கன்னு தெரியுமா பாஸ்?girls and boys message

- 0 comments

ஆண்களை பெண்கள் எப்படியெல்லாம் தவிக்கவிடுவாங்கன்னு தெரியுமா பாஸ்? இதை படியுங்க…

by abtamil
Tamil newsYesterday,
ஆண்களை எப்படியெல்லாம் பெண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா… 

இப்படித்தான் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது பாக்ஸ் நியூஸ் நிறுவனம். இந்தப் பட்டியலில் பத்து விதமான கொடுமைகளை ஆண்களுக்கு பெண்கள் இழைப்பதாக அது கூறியுள்ளது. ஆண்களின் உணர்வுகள் மற்றும் ஈகோவுடன் விளையாடிப் பார்ப்பதை ரசிக்கிறார்களாம் பெண்கள்… அந்தக் கொடுமையைக் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்..

 போன் பண்ணா எடுப்பதே இல்லை

 பெண்களுக்கு நல்ல மூடு இருந்தால் தங்களுக்குப் பிடித்தமான ஆணுக்கு, அவர்களே போன் செய்து கொஞ்சுவார்களாம், குலாவுவார்களாம்.. ஆனால் பிடிக்காமல் போய் விட்டால், போனே செய்ய மாட்டார்களாம். போன் செய்தாலும் கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களாம். இல்லாவிட்டால் செல் போன் எண்ணையே மாற்றி விட்டு அப்படியே மறந்து போய் விடுவார்களாகம்.

 ப்ரீ' சர்வீஸுக்கு மட்டும்

 சில பெண்கள் தங்களது காதலர்களுடன் வெளியில் போகும் போது ஐந்து பைசா செலவழிக்க மாட்டார்களாம். மாறாக, காதலரையே முழுக்க செலவு செய்து மொட்டை போட்டு திருப்பதி ராஜாவாக்கி அனுப்புவார்களாம்.

 டைம் பாஸுக்கு

 இன்னும் சில பெண்கள், டைம் பாஸுக்காகவே ஆண்களிடம் பழகுகிறார்களாம். அதாவது தனக்குப் பிடித்த இன்னொருவர் கிடைக்கும் வரை இவரை வைத்திருப்பது. கிடைத்தவுடன் பழைய ஆளை கைவிடுவது என்று பொழுதுபோக்கு போல செய்வார்களாம். இப்படிப்பட்ட பெண்கள் எப்போதும் தனிமையாக இருக்க விரும்ப மாட்டார்களாம். எனவே தனக்குத் தோதான இன்னொருவர் கிடைக்கும் வரை பழையவரிடம் பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்வார்களாம்.

 உணர்வுகளுடன் விளையாடுவது

பல பெண்களுக்கு ஆண்களைத் தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கிறதாம். ஆண்கள் தங்கள் மீது காட்டும் அன்பை அவர்கள் 'மிஸ் யூஸ்' செய்கிறார்கள் என்று பாக்ஸ் நியூஸ் சொல்கிறது. மேலும் தங்களுக்குத் தேவையானதை சாதித்துக் கொள்வதற்காக, ஆண்களின் பலவீனத்தையும் பயன்படுத்துகிறார்களாம். அதாவது கண்ணீர் விடுவது, குழைந்து பேசுவது.. இப்படி.

 என்னா அடி…!

 இன்னும் சில பெண்கள் கோவை சரளா ரேஞ்சுக்கு இருப்பார்களாம். அதாவது வடிவேலு அடித்தால் அது நியூஸ் இல்லை, கோவை சரளா அடித்தால்தான் நியூஸ் என்பது போல. இப்படிப்பட்ட குணம் கொண்ட பெண்கள், அடிக்கடி காதலரை அடிப்பது, கோபத்தில் முறைப்பது போன்றவற்றை செய்வார்களாம். நாம் என்ன செய்தாலும் இவன் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையாம் அது.

 எப்பவுமே 'இவன்' இப்படித்தான் பாஸு…

 இன்னும் சில பெண்கள், தங்களது காதலரை மற்றவர்களுக்கு முன்பு மட்டம் தட்டிப் பேசுவது, கேலி செய்வது, கிண்டலடிப்பது என்று நடந்து கொள்கிறார்களாம். மேலும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு 'லந்து' செய்வதும் உண்டாம்.

 மனதில் உள்ளதை சொல்வதே கிடையாது

 பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளதாம். அதாவது தன்னை விரும்பும் நபரிடம் தனது மனதில் இருப்பதை அப்படியே சொல்வது கிடையாதாம். மேலும் ஏற்கனவே மனதில் ஒருவரை வைத்திருந்தாலும் கூட, அதை தனது காதலரிடம் சொல்வது கிடையாதாம்.

 எல்லாம் ஓ.கே.. செக்ஸ் மட்டும் முடியாது

 இதுவும் பெண்கள் கடைப்பிடிக்கும் குரூரமான டெக்னிக்காம். ஆண்களைப் பொறுத்தவரை காதலியரிடம் அன்பை மட்டுமல்லாமல் செக்ஸையும் அவர்கள் விரும்புகிறார்கள். இது இயல்பானதும் கூட. ஆனால் செக்ஸ் மட்டும் கூடவே கூடாது என்று பெண்கள் முரண்டு பிடிக்கிறார்களாம்.

 சோதனை மேல் சோதனை…

 இன்னும் சில பேர் இப்படிச் செய்கிறார்கள். அதாவது அந்த ஆண் ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பார். தனது நண்பர்களுடன் எங்காவது போயிருப்பார். அப்போது பார்த்து போன் வரும்.. உடனே கிளம்பி வா என்று காதலியிடமிருந்து. முடியாது என்று சொன்னால் அவ்வளவுதான் கொந்தளித்து போய் விடுவார்களாம். அதை விட முக்கியமாக, நாம் எங்காவது போகிறோம், யாரையாவது பார்க்கப் போகிறோம் என்று தெரிந்தால், வேண்டும் என்றே என்னுடன் வா என்று கூப்பிடுவார்களாம். மறுத்தால் சண்டைதான்…நீ என்னை உண்மையிலேயே லவ் பண்ணலை என்று 'பன்ச்'சுடன்…

 பாத்தியா எனக்கும் ஆள் இருக்கு…

 இப்படியும் சிலர் உள்ளனராம். அதாவது தங்களது காதலர்களை சீண்டுவதற்கும், டென்ஷன் கொடுப்பதற்கும், வேண்டும் என்றே மனதை நோகடிப்பதற்காகவும், பிற ஆண்களுடன் நெருங்கிப் பழகுவார்களாம், அவர்களுடன் தாங்கள் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்வார்களாம்… இது அமெரிக்க கதை.. நம்ம ஊர் கதை எப்படி என்று தெரியவில்லை!

Show commentsOpen link

[Continue reading...]

தில்லாக களமிறங்கும் வடிவேலு! Vadivel tamil movie news

- 0 comments

தில்லாக களமிறங்கும் வடிவேலு!

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today

இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் ஜெகஜாலபுஜபல தெனாலிராமன். அவர் இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படம் ஆரம்பத்தில் சில பிரச்னைகளில் தடுமாறினாலும், அதன்பிறகு நடந்த சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப்பிறகு சீராக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை ஏவிஎம்மில் பிரமாண்ட தர்பார் செட் போட்டு படமாக்கியவர்கள் இப்போது குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். அங்கு அருவியில் குளிப்பது போன்ற சில கிளுகிளுப்பான காட்சிகள் படமாகி வருகிறதாம். ஆக, ஆரம்பத்தில் சூடாக இருந்த வடிவேலு இப்போது குளுகுளுவென்று குளிர்ச்சியாக காணப்படுகிறாராம்.

அவர் ஒத்துழைப்பு பிரமாதமாக இருப்பதால் விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள். அதனால் வருகிற பொங்கல் தினத்தில் தெனாலிராமனை ரசிகர்களுக்கு விருந்து படைக்கவும் தயாராகி விட்டார்களாம். சமீபத்தில் கூட நாகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலும், படத்தை பொங்கலுக்கு வெளியிட போவதாக அறிவித்தார்.

இதே நாளில் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய படங்கள் வெளியாகயிருப்பது தெரிந்தும் தில்லாக களமிறங்குகிறாராம் வைகைப்புயல்.

The post தில்லாக களமிறங்கும் வடிவேலு! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத்துக்கு 4 ஆண்டு ஜெயில்? Fodder scam lalu prasad yadav 4 year did jail

- 0 comments

கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத்துக்கு 4 ஆண்டு ஜெயில்? Fodder scam lalu prasad yadav 4 year did jail

Tamil NewsToday,

ராஞ்சி, அக்.3–

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்– மந்திரியாக இருந்தபோது ரூ.950 கோடிக்கு கால்நடை தீவன ஊழல் நடந்தது. இததொடர்பாக சி.பி.ஐ. 53 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. லாலுபிரசாத் மீது மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 17 ஆண்டுகளாக இந்த மாட்டுத் தீவன ஊழல் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 30–ந்தேதி ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது. முன்னாள் முதல்–மந்திரிகள் லாலுபிரசாத் யாதவ், ஜெகந்நாத் மிஸ்ரா, ஜெகதீஸ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து லாலுபிரசாத்தும் மற்றவர்களும் ராஞ்சி அருகில் உள்ள விர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் 42 பேருக்கும் எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு 3–ந்தேதி (இன்று) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி காணொளி காட்சி எனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தீர்ப்பு வெளியிடப்படுகிறது.

இதையொட்டி இன்று காலை வக்கீல்கள் வாதம் நடந்தது. முதலில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி கூறியதாவது:– குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊழல் மற்ற ஊழல்களுக்கு சிகரமாக உள்ளது. இதில் பல வி.ஐ.பி.க்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். எனவே லாலு பிரசாத்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு சி.பி.ஐ. தரப்பு வக்கீல் கோரினார்.

லாலுவின் வக்கீல் சுரீந்தர்சிங் பேசுகையில், ''லாலுவுக்கு உடல்நலம் சரி இல்லை. எனவே அவருக்கு 3 ஆண்டுகள் அல்லது குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். லாலு மீதான குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் லாலுவுக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி பி.கே.சிங் தீர்ப்பை வெளியிட உள்ளார். லாலு மீது ஊழல், கிரிமினல் சதி, மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் லாலுவின் அரசியல் பணி மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

லாலுவுக்கு ஜெயில் தண்டனை கிடைப்பது உறுதியாகி விட்டது. இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அவரது எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்படும். குற்ற வழக்குகளில் சிக்கி 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதன் மூலம் காங்கிரஸ் மேல்–சபை எம்.பி. ரஷீத்மசூத் முதன் முதலாக எம்.பி. பதவியை இழந்தார். அவரைத் தொடர்ந்து லாலு இரண்டாவதாக எம்.பி. பதவியை பறி கொடுக்கிறார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

ராஜா ராணி வெற்றி பெற நயன்தாராவின் காதல் தோல்வி தான் காரணம் ?

- 0 comments

நயன்தாராவின் காதல் தோல்வி தான் காரணமா? – இயக்குனர் பதில்!

by admin
TamilSpyYesterday,

நட்சத்திர பட்டாளங்கள் ஜொலித்திருக்கும் ராஜா ராணி திரைப்படம், திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக, ரசிகர்கள் மனதையும் நிறைவித்துக்கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் ரிலீஸானாலே வெற்றி தான் என்கிற நிலை உருவாகிவிட்ட இக்காலத்தில், ரிலீஸான முதல் வாரத்திலேயே மாபெரும் வசூலை அள்ளிவிட்ட ராஜா ராணி டீம் சும்மா இருப்பார்களா???

இயக்குனர் அட்லி, நடிகர்கள் ஆர்யா, ஜெய் உள்ளிட்ட ராஜாராணி டீம் கலந்துகொண்ட ராஜா ராணி திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. சக்சஸ் மீட்டில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த இயக்குனர் அட்லியிடம் "நயன்தாரா காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டவர் என்பது தான் அவரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய காரணமா? குறிப்பிட்ட காசியில் நயன்தாரா அழுதுகொண்டிருக்கும் போது டி.வி.யில் பிரபுதேவாவின் 'ஊத்திகின்னு கடிச்சிக்கவா' பாடலும், சிம்புவின் தந்தை டி.ஆர் பாடும் 'தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி' பாடலின் ஒளிபரப்பாவதற்கு ஏதேனும் காரணமிருக்கிறதா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் அட்லி "நயன்தாராவின் காதல் தோல்விக்கும் அவர் நடித்ததற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கியூட்டான அதே சமயம் மெச்சூர்டான நடிகை தேவைப்பட்டார். அப்போது நயன்தாராவை பலர் பரிசீலித்ததால் அவரை நடிக்கச் சொன்னோம். நயன்தாரா இந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி அழுத்தமாக நடிக்க அவரது காதல் தோல்வியும் காரணமாக இருக்கலாம். ஆனால் பிரபுதேவாவின் பாடல் ஒளிபரப்பானதெல்லாம் எதேர்ச்சையாக நடந்த ஒன்று" என்று கூறினார்.

Show commentsOpen link

[Continue reading...]

அமெரிக்காவின் அரசு அலுவகங்கள் மூடல் நடவடிக்கையால் இந்தியாவில் ஐ.டி. தொழில் பாதிக்குமா? Indian IT field has no impact on US shut down

- 0 comments

அமெரிக்காவின் அரசு அலுவகங்கள் மூடல் நடவடிக்கையால் இந்தியாவில் ஐ.டி. தொழில் பாதிக்குமா? Indian IT field has no impact on US shut down
Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.3–

அமெரிக்க அதிபராக ஒபாமா 2–வது தடவை பதவி ஏற்றவுடன் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். அதற்கு ஒபாமா கேர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஜனநாயக கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகிவிடும்.

இதன் மூலம் அடுத்த தேர்தலிலும் அக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உருவாகும். எனவே, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொடக்கத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்தது. மேலும் இத்திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதால் மற்ற துறைகளுக்கு போதிய பணம் வழங்க முடியாது என்றும் கூறி வந்தது.

எனவே, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதை காரணம் காட்டி வருகிற 2014–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஆதரவு தராமல் தடுத்துவிட்டது. இதனால் அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.

இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்ளிட்ட அரசு பணிகள் முழுவதும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே அதை சமாளிக்க முதல் கட்டமாக அமெரிக்காவில் சில அரசு நிறுவனங்களை மூடியது. இதனால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் நிலமை ஆட்டம் கண்டிருப்பதால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிலில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.

இதுதொடர்பாக, கருத்து கூறிய முன்னோடி ஐ.டி. நிறுவன அதிகாரி ஒருவர், இந்த தொழிலில் அமெரிக்காவுடனான இந்திய ஐ.டி. துறையின் பெரும்பாலான தொடர்புகள் தனியார் செலவினங்களை மையமாக கொண்டே இயங்குகின்றன. அமெரிக்க அரசுடன் வர்த்தக ரீதியாக எந்த நேரடி தொடர்பும் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு இல்லை.

இந்நிலையில், அமெரிக்க அரசில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை இந்தியாவில் உள்ள தகவல் தொழில் நுட்ப அவுட் சோர்சிங் தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger