நயன்தாராவின் காதல் தோல்வி தான் காரணமா? – இயக்குனர் பதில்!
by admin
TamilSpyYesterday,
நட்சத்திர பட்டாளங்கள் ஜொலித்திருக்கும் ராஜா ராணி திரைப்படம், திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக, ரசிகர்கள் மனதையும் நிறைவித்துக்கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படம் ரிலீஸானாலே வெற்றி தான் என்கிற நிலை உருவாகிவிட்ட இக்காலத்தில், ரிலீஸான முதல் வாரத்திலேயே மாபெரும் வசூலை அள்ளிவிட்ட ராஜா ராணி டீம் சும்மா இருப்பார்களா???
இயக்குனர் அட்லி, நடிகர்கள் ஆர்யா, ஜெய் உள்ளிட்ட ராஜாராணி டீம் கலந்துகொண்ட ராஜா ராணி திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. சக்சஸ் மீட்டில் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த இயக்குனர் அட்லியிடம் "நயன்தாரா காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டவர் என்பது தான் அவரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய காரணமா? குறிப்பிட்ட காசியில் நயன்தாரா அழுதுகொண்டிருக்கும் போது டி.வி.யில் பிரபுதேவாவின் 'ஊத்திகின்னு கடிச்சிக்கவா' பாடலும், சிம்புவின் தந்தை டி.ஆர் பாடும் 'தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி' பாடலின் ஒளிபரப்பாவதற்கு ஏதேனும் காரணமிருக்கிறதா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.
கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் அட்லி "நயன்தாராவின் காதல் தோல்விக்கும் அவர் நடித்ததற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கியூட்டான அதே சமயம் மெச்சூர்டான நடிகை தேவைப்பட்டார். அப்போது நயன்தாராவை பலர் பரிசீலித்ததால் அவரை நடிக்கச் சொன்னோம். நயன்தாரா இந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி அழுத்தமாக நடிக்க அவரது காதல் தோல்வியும் காரணமாக இருக்கலாம். ஆனால் பிரபுதேவாவின் பாடல் ஒளிபரப்பானதெல்லாம் எதேர்ச்சையாக நடந்த ஒன்று" என்று கூறினார்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?