Monday, 21 October 2013

சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பாக அரசிடம் உள்ள 64 ரகசிய கோப்புகளை மம்தா வழங்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை Nethaji family asks for files related to him

- 0 comments

சுபாஸ் சந்திரபோஸ் தொடர்பாக அரசிடம் உள்ள 64 ரகசிய கோப்புகளை மம்தா வழங்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை Nethaji family asks for files related to him

கொல்கத்தா, அக்.22-

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 68 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டெல்லியில் உள்ள மிஷன் நேதாஜி என்ற அமைப்பு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேதாஜியின் மரணம் தொடர்பான 33 கோப்புகளின் நகலை கேட்டு மனு செய்திருந்தது.

அந்த தகவல்களை அளித்தால் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவும், நாட்டின் இறையாண்மையும் பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறிவிட்டது.

நேதாஜி, தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடந்த ஆண்டில் கேட்டுக் கொண்டனர்.

ஆனால், இவ்விவகாரத்தில் உதவிட அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கினார்.

இதுமட்டுமின்றி 1943ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்தபடியே இந்தியா இனி யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சுதந்திரமானவர்கள் என்று நேதாஜி பிரகடனம் செய்தார். இதற்கு 9 நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த இருநிகழ்வுகளின் 70ம் ஆண்டு விழா நேற்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. ஜப்பானில் உள்ள நேதாஜியின் பற்றாளர்கள் சிலர் அவரது பெயரில் நேற்று புதிய இணையதளம் ஒன்றையும் துவக்கினர்.

கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தியாகிகள் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

இவ்விழாவில் பேசிய நேதாஜியின் உறவினர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய கோப்புகளை மேற்கு வங்காள அரசிடம் உள்ளது. அவை நமக்கு கிடைத்தால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்களை அறிய முடியும். ஆனால், இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நாங்கள் பலமுறை கடிதங்கள் எழுதி விட்டோம்.

ஒரு கடிதத்திற்கு கூட அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாநில அரசே நேதாஜியின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்க மறுத்து விட்டால்.. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எவ்வாறு பெற முடியும்?

மாநில அரசும், மத்திய அரசும் நேதாஜி தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து கோப்புகளையும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

...

shared via

[Continue reading...]

இந்தியாவின் 25 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்கு: 2 வீரர்கள் படுகாயம் Pak fires at 25 Indian border posts

- 0 comments

இந்தியாவின் 25 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்கு: 2 வீரர்கள் படுகாயம் Pak fires at 25 Indian border posts

ஜம்மு, அக். 21-

காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் நேற்றிரவும் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர்கள் நேற்றிரவு முழுவதும் ஜம்மு, சம்பா, கத்துவா செக்டர்களின் 190 கி.மி. சர்வதேச எல்லை அருகே உள்ள ஆர்.எஸ். புரா, ராம்கார், கனாசக், அர்னியா, செகினெக் உள்ளிட்ட 25 ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் ஜம்மு நகரின் சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  

இதுமட்டுமில்லாமல், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எல்லை அருகிலுள்ள கிராமங்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் உயிருக்கு பயந்த அப்பகுதி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிவிட்டனர். அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதல்கள்களை அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த 8 வருடங்களில், இந்த ஆண்டு முதல் முறையாக 140 முறை எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதி அருகே பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு பதிலளிக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சனி இரவும் 14 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதிலும் இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். இப்பகுதிகளை நாளை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே பார்வையிடுகிறார்.

...

shared via

[Continue reading...]

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

- 0 comments

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

திருவொற்றியூர்,அக். 21–

மணலி, காமராஜர் சாலையில் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. இன்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்றவர்கள் எந்திரம் உடைந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் குத்தி உடைத்து இருப்பது தெரிந்தது. பணத்தை எடுக்க முடியாததால் அவர்கள் திட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர். இதனால் பல லட்சம் பணம் தப்பியது.

அங்கிருந்த ரகசிய காமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

கொள்ளை கும்பல் ரகசிய காமிரா இருப்பதை கவனிக்காததால் அதனை சேதப்படுத்தாமல் சென்றுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

இன்று 4–வது நாளாக தேடுதல்வேட்டை: தங்கபுதையல் சாமியாருக்கு நரேந்திரமோடி ஆதரவு Modi to support the priest gold treasure

- 0 comments

இன்று 4–வது நாளாக தேடுதல்வேட்டை: தங்கபுதையல் சாமியாருக்கு நரேந்திரமோடி ஆதரவு Modi to support the priest gold treasure

அலகாபாத், அக்.21–

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஷோபன்சர்க்கார் என்பவர், ராஜா ராவ்ராம் பக்சிங் தன் கனவில் தோன்றி உன்னாவ் பகுதியில் உள்ள தமது கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்து இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

அந்த 1000 டன் தங்கத்தை அரசு தோண்டி எடுக்க வேண்டும் என்று அவர் கடந்த சில ஆண்டுகளாக கூறி வந்தார்.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அந்த கோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் தேடும் பணியை தொடங்கியது. ஜேசிபி எந்திரங்கள் மற்றும் ஆழ்துளை கருவிகள் மூலம் கோட்டை பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதா என்று தேடப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இன்று (திங்கட்கிழமை) 4–வது நாளாக தங்கம் தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே 1000 டன் தங்கம் தேடப்படுவதை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் இதுபற்றி கூறுகையில், ''1000 டன் தங்கம் தேடுவதை எல்லா நாடுகளும் உற்றுப் பார்க்கின்றன. இது தேவை இல்லாதது. அங்கு தங்கம் தோண்டுவதை விட்டு விட்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள 1000 டன்னுக்கு மேல் உள்ள தங்கத்தை திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து சாமியாரை அவர் அவமதித்து விட்டதாக கூறப்பட்டது.

சில இந்து அமைப்புகள் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி தங்கள் அதிருப்தியை வெளியிட்டன.

இதையடுத்து நரேந்திர மோடி உத்தரபிரதேச சாமியாருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ''கடந்த பல ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்கள் கோபன் சர்க்கார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது தியாகத்துக்கு நான் தலைவணங்குகிறேன்'' என்று கூறியுள்ளார்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger