இந்தியாவின் 25 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்கு: 2 வீரர்கள் படுகாயம் Pak fires at 25 Indian border posts
ஜம்மு, அக். 21-
காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் நேற்றிரவும் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர்கள் நேற்றிரவு முழுவதும் ஜம்மு, சம்பா, கத்துவா செக்டர்களின் 190 கி.மி. சர்வதேச எல்லை அருகே உள்ள ஆர்.எஸ். புரா, ராம்கார், கனாசக், அர்னியா, செகினெக் உள்ளிட்ட 25 ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் ஜம்மு நகரின் சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ந்து வெடி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
இதுமட்டுமில்லாமல், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எல்லை அருகிலுள்ள கிராமங்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் உயிருக்கு பயந்த அப்பகுதி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிவிட்டனர். அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதல்கள்களை அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த 8 வருடங்களில், இந்த ஆண்டு முதல் முறையாக 140 முறை எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதி அருகே பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு பதிலளிக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சனி இரவும் 14 ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதிலும் இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். இப்பகுதிகளை நாளை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே பார்வையிடுகிறார்.
...
shared via
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?