Thursday, 29 December 2011

நண்பனோடு மோத தயங்கிய 3 !துணிந்து மோதும் வேட்டை!!

- 0 comments
 
 
 
இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன் நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.
 
இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த 13 படங்கள்:
 
1. மதுவும் மைதிலியும்
 
2. பாவி
 
3. கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்
 
4. பதினெட்டான்குடி
 
5. வினாயகா
 
6. மகான் கணக்கு
 
7. வழிவிடு கண்ணே வழிவிடு
 
8. அபாயம்
 
9. வேட்டையாடு
 
10. மகாராஜா
 
இந்த பத்து படங்களும், நேரடி தமிழ் படங்கள்.
 
இவை தவிர, 'வேட்டை நாயகன்,' 'ஸ்பீட்-2,' 'புயல் வீரன்' ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன.
 
ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள்:
 
நண்பன்
 
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம். இந்தியில் வெளியான '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் இது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளது.
 
வேட்டை
 
ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் ஆகியோர் நடித்த படம் இது. லிங்குசாமி இயக்கியுள்ளார். அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார்.
 
தமிழகத்தில் மிகப் பெரிய விடுமுறை சீஸன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலம் விடுமுறை. தினசரி 5 காட்சிகள் வரை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு பற்றாக்குறை மற்றும் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

பொங்கலுக்கு வெளிவருவதாக சொல்லப்பட்ட தனுசின் நடிப்பில் அவரது மனைவியும் சுப்பர் ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா இயக்கத்தில் உலகநாயகன் கமலின் மகள் கதாநாயகியாக நடிக்கும் 'கொலைவெறி ...' பாடல் புகழ் ௩ படம் என்ன காரணத்தாலோ பொங்கல் தினத்தில் வெளிவருவதாக இல்லை. ஒரு வேளை விஜய் , சங்கர் கூட்டணியோடு மோதி விசபரிட்சையில் ஈடுப்பட விரும்பவில்லை போலும் ...!


 


[Continue reading...]

தமிழ் உணர்வாளர்களை கிண்டல் பண்ணும் சங்கீதா- கிரிஷ் ஜோடி

- 0 comments
 
 
 
சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் அமைப்பு நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பாடகருமான கிரிஷ் ஆகிய மூன்று பேரும் கலந்துகொள்வதாக இருந்தார்கள். விடுதலைப்புலிகளின் எதிர்பாளரான கருணா கோஷ்டியினர் இந்த விழாவை நடத்துவதாகவும், எனவே அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் திடீர் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
 
இதைத்தொடர்ந்து நடிகர் ஜீவா அந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். தமிழர்கள் மனம் புண்படுகிற மாதிரி எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி, சுவிட்சர்லாந்து பயணத்தை அவர் ரத்து செய்து விட்டார்.
 
இந்த நிலையில், நடிகை சங்கீதாவும், அவருடைய கணவர் பாடகர் கிரிசும் சென்னையில் நேற்று மாலை பேட்டி அளித்தார்கள்.

அப்போது சங்கீதா கூறியதாவது:-
 
நான் தமிழ்ப்பெண். இங்கேயே பிறந்து வளர்ந்தவள். தப்பான நிகழ்ச்சிக்கு போக மாட்டேன். நான், நேர்மையான பெண். பணத்துக்கு ஆசைப்பாட்டு சுவிட்சர்லாந்துக்கு போகவில்லை. கடந்த வருடம் இதே அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். நிகழ்ச்சியை நடத்தியவர்கள், எங்களிடம் மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். அவர்களுக்குள் உள்ள போட்டி காரணமாக, யாரோ சிலர் எங்களுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
 
மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த மிரட்டல் பற்றி நான் போலீஸ் கமிஷனரிடம் பேசினேன். உங்கள் தொழில் தொடர்பாக செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று அவர் கூறினார். நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடமும் கூறினேன். நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை. சுவிட்சர்லாந்துக்குத்தானே செல்கிறீர்கள். அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது என்றார்.
 
சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அங்குள்ள கமிஷனர் கலந்து கொள்கிறார். அதனால் எங்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு கிடைக்கும். எனவே 31-ந் தேதி அன்று இரவு இங்கிருந்து நாங்கள் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட இருக்கிறோம்.
 
இவ்வாறு சங்கீதா கூறினார்.
 
சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் கூறியதாவது:-
 
இலங்கையில் நடந்த போருக்குப்பின், தலைவர் இல்லாததால் தமிழ் அமைப்புகள் இரண்டு மூன்றாக பிரிந்து கிடக்கிறது. அவர்களுக்குள் நடக்கும் சண்டையில், எங்களை பிரச்சினைக்குள்ளாக்குவது எந்தவிதத்தில் நியாயம்?
 
இது, எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு இடையே நடைபெறும் சண்டை போல் உள்ளது. இதனால் எங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எங்களை நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பவர், தமிழர்களுக்கு எதிரானவர் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். எனக்கு பாட மட்டுமே தெரியும். அரசியல் தெரியாது.
 
மேற்கண்டவாறு கிரிஷ் கூறினார்.



[Continue reading...]

நிர்வாணமாக நடித்த முன்னணி நடிகை!

- 0 comments
 
 
 
கன்னடப் படத்துக்காக உடலில் ஒட்டுத் துணியின்றி நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார் முன்னணி நடிகை பூஜா காந்தி.
 
தமிழில் கரணுடன் கொக்கி, அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.
 
தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் 'தண்டுபால்யா' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமாகியுள்ளது.
 
இது ஒரு க்ரைம் த்ரில்லர். படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "நான் இயக்கும் முதல் க்ரைம் த்ரில்லர் இந்தப் படம்.
 
தொடர் கொலைகள் செய்துவந்த ஒரு ரவுடி கூட்டத்தின் உண்மை கதை இது. 11 பேர் கொண்ட இந்த கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணும் இடம்பெற்றிருந்தார். இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது லட்சுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.
 
இதைப் படமாக்க முடிவு செய்தேன். இதற்கான தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன். பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும், பீடி புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன்.
 
3 வார யோசனைக்குப் பிறகு நிர்வாணமாக நடிக்க சம்மதித்தார். சமீபத்தில் அவர் நடித்த நிர்வாண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. யூனிட் ஆட்களில் சிலர் மட்டும் இருக்க, ரகசியமாக படமாக்கினோம். பயமோ கூச்சமோ இல்லாமல் நடித்தார் பூஜா. இந்தக் காட்சியை அருவருக்கும்படி இருக்காது," என்றார்.




[Continue reading...]

ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் :அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த்

- 0 comments
 
 
 
பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி மும்பையில் அன்னா ஹசாரே இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
 
இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள இ.மெயில் செய்தியில் கூறி இருப்பதாவது:-
 
ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதில் சந்தேகம் இல்லை. அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம். ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.
 
பாராளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
 
சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா. இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது. ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.
 
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
 
ஏற்கனவே டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோதும் ரஜினி ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் பங்கேற்க தனக்கும் ஆசை உள்ளதென்றும் உடல்நலம் சரி இல்லாததால் போகவில்லை என்றும் கூறி இருந்தார்.
 
சமீபத்தில் அன்னா ஹசாரே சென்னை வந்து பச்சையப்பா கல்லூரியில் நடந்த ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பங் கேற்று பேசினார். அப்போது அன்னா ஹசாரேயிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு ரஜினி பேசினார். உடல்நலம் விசாரித்ததுடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று உறுதி அளித்தார்.



[Continue reading...]

ஜெயலலிதாவை கிண்டல் பண்ணும் விக்ரம் :அதிமுக வினர் கோபம்?

- 0 comments
 
 
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ராஜபாட்டை திரைப்படம் நிலமோசடி கதையை அடிப்படையாக கொண்டது. நாடெங்கும் நில மோசடி தொடர்பான கைதுகளும், விசாரணைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்நேரத்தில், படத்தில் நடித்த விக்ரம் மீது மாறாத கோபத்தோடு பல்லை நறநறக்கிறார்கள் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர்.

நில மோசடி வழக்கு பெரும்பாலும் திமுக வினருக்கு எதிராகவே இருக்கிறது. உண்மை அப்படியிருக்க, ஏன் அதிமுகவினருக்கு அதிருப்தி? வேறொன்றுமில்லை, இந்த படத்தில் வரும் அக்கா என்கிற கேரக்டர் யாரை குறிக்கிறது என்பது குறித்துதான் இந்த அதிருப்தியும் கோபமும்.

முதல்வர் ஜெயலலிதா போலவே நடை உடை பாவனைகளோடு ஒரு வில்லியை காட்டி, அவரையும் அடுத்தவர்கள் ம0��ரனை கூட மன்னித்துவிடலாம். ஆனால் படத்தின் கதையை இஞ்ச் பை இஞ்ச்சாக கேட்டு கரெக்ஷன் சொல்லி நடிக்கும் விக்ரம் இப்படி ஒரு பெண் வில்லி கேரக்�A minor-latin;">இப்படி ஒரு கதையை உருவாக்கிய சுசீந்திரனை கூட மன்னித்துவிடலாம். ஆனால் படத்தின் கதையை இஞ்ச் பை இஞ்ச்சாக கேட்டு கரெக்ஷன் சொல்லி நடிக்கும் விக்ரம் இப்படி ஒரு பெண் வில்லி கேரக்டருக்கு அனுமதி தந்ததே தவறு என்கிற கோணத்திலும் இந்த விஷயத்தை கவனிக்கிறார்களாம்.

இந்த நேரத்தில் பரபரப்பை கிளப்பினால் அது படத்திற்கு இன்னும் விளம்பரமாகி விடும் அபாயம் இருக்கிறது. எனவே கொஞ்சம் 'கேப்' விட்டு விசாரிக்கலாம் என்றும் தகவல் கசிகிறது அதிமுக வட்டாரத்திலிருந்து.

சீயானுக்கு எதற்கு இந்த சிக்கலெல்லாம்?


 


[Continue reading...]

நாயை பராமரிக்க கணவர் வேண்டும் :ஷெரீன்!

- 0 comments
 
 
 
காதல், கத்திரிக்காய் என காணாமல் போன "துள்ளுவதோ இளமை" புகழ் ஷெரீன் "அபாயம்" படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கொஞ்சகாலத்திற்கு முன் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் "டேன்ஜர்" எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் அபாயமாக தமிழில் டப்பாகி வெளியாக உள்ளது.
 
இது சம்பந்தமான பிரஸ்மீட்டில் ஷெரின் உங்களது காதல் என்னாயிற்று? காதலர் என்ன ஆனார்? எனக்கேட்ட போது, எனக்கு எக்கச்சக்கமான பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள் ? என வினவினார். என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம் என்று எஸ்கேப் ஆனார்.
 
மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி வெண்ணிலா தான் என்றவர், அதுவும் பெண் நாய் குட்டி என்றதுடன் அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவராகவும் முடியும் மற்றபடி இன, மொழி, மதபாகுபாடெல்லாம் கணவர் விஷயத்தில் நான் பார்க்கப்போவதில்லை என்றார். தெளிவான பெண்!



[Continue reading...]

காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!

- 0 comments
 
 
 
காதலனுடன் புத்தாண்டு கொண்டாட கோலிவுட் ஹீரோயின்கள் திட்டமிட்டுள்ளனர். 2012ம் ஆண்டின் முதல் நாளை ஜாலியாக கொண்டாட கோலிவுட் நட்சத்திரங்கள் வெவ்வேறு திட்டங்கள் போட்டுள்ளனர். நடிகை த்ரிஷா தோழிகளுடன் சிட்னி பறக்கிறார். அவரது காதலரும் தனியே சென்று, பிறகு சிட்னியில் புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம். ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் முகாமிடுகிறார்.
 
காதலனுடன் ஜாலியாக புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் கலந்துகொள்கிறார். அங்கேயே தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம். ஜெனிலியா, தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கோலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும் சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட பிளான் போட்டுள்ளனர்.
 
லாஸ் ஏஞ்சல்ஸில் ஷூட்டிங்கிற்கு செல்லும் சிம்பு, அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார். இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் 'இரண்டாம் உலகம்Õ பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் தேதி அவரது மனைவி கீதாஞ்சலி ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் 'துப்பாக்கிÕ பட ஷூட்டிங்கில் நடித்து வரும் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார்.
 
மனைவி சங்கீதா, குழந்தைகளுடன் வீட்டிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார். அஜீத், தனது மனைவி ஷாலினி, குழந்தையுடன் ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கு பறந்துவிட்டார். குஷ்பு தனது கணவர் சுந்தர்.சி., குழந்தைகளுடன் கோலாலம்பூர் செல்கிறார். ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா, தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார். அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் கோவா செல்கிறார்.
 

 


[Continue reading...]

ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிகர்கள்!

- 0 comments
 


ரஜினியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் இருந்தவர்களுக்கு இலவசமாக தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்து ஆதரவு தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இது அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பினர் நிருபர்கள். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதிலளிக்காத ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைமுகமாக தாக்கும் விதத்தில், "கறுப்புப் பணத்தில் கட்டிய மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் நடக்கிறது. அப்படியும்கூட 10 பேர்தான் அங்கே வந்திருக்கிறார்கள். மண்டபத்தைக் கொடுத்தவருக்கு இது புரிந்தால் சரி", என்று கிண்டலடித்திருந்தார்.

இளங்கோவனின் இந்த பதிலைக் கண்டித்து வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்ட மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், அவரது உருவர் படங்களை எரித்தனர் ரசிகர்கள்.

"தலைவர் நல்ல விஷயம் என நம்பி இந்த மண்டபத்தைக் கொடுத்தார். அவருக்கு வேறு உள்நோக்கமில்லை. ஊழல் ஒழிய வேண்டும் என்பது மட்டும்தான் தலைவர் ரஜினியின் இலக்கு. ஹஸாரே என்றல்ல, யார் இந்த நல்ல காரியத்தில் இறங்கினாலும் அவர் ஆதரவு கிடைக்கும். அந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல், ரஜினி அவர்கள் கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்து கட்டிய ஒரு மண்டபத்தைப் பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் கேவலமாகப் பேசியதை ரசிகர்களான எங்களால் பொறுக்க முடியவில்லை.

இந்தியத் திரையுலகிலேயே நேர்மையாக அரசுக்கு வரி செலுத்துபவர்களில் முதலில் இருப்பவர் எங்கள் தலைவர் என்பதை இளங்கோவன் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்," என்றார், இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சோளிங்கர் என் ரவி.

இப்படி தான் நடக்க போகிறது...இதற்காக தான் இளங்கோவன் அப்படி பேசினார் என்பதை எமது நேற்றைய பதிவில் சொல்லி இருந்தோம் அதை படிக்க இங்கு செல்லவும்



[Continue reading...]

தானே புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

- 0 comments
 
 


தானே புயல் கரையை கடக்கும் போது பலவீனம் ஆவதற்கான அறிகுறிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் புயல் தாக்கும் போது பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கடல் கொந்தளிப்பு அதிகமாகும் என்பதால் கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழுந்து சீறி வரும் என்பதால் மீன்பிடி படகுகளை பாதுகாத்துக் கொள்ளவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூறை காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் பட்சத்தில் எங்கும் வெள்ளக்காடாகி விடும். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையை மிரட்டி வரும் தானே புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

அதே போல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டை `தானே' புயல் தாக்குமா? என்பதை தெரிந்து கொள்ள
இங்கு செல்லவும்



[Continue reading...]

இயக்குநர் சரணை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!!

- 0 comments
 
 
ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான மோகன், ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பால கிருஷ்ணன் என்ற ஆடிட்டர் மூலமாக சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான சரண் எனக்கு அறிமுகமானார்.
 
சில வழக்குகள் சம்பந்தமாக என்னுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர். அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நான் வாதாடியுள்ளேன். இதற்காக அவர் எனக்கு ரூ.6 லட்சம் பணம் தர வேண்டியுள்ளது. இந்த பணத்தை பலமுறை நான் திருப்பிக் கேட்டும் அவர் தரவில்லை.
 
இதற்காக அவர் கொடுத்த செக்குகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன. எனவே அவர் மீது செக் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வருகிறது. 3 முறை சரண் சார்பில் அவரது வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி அவகாசம் கேட்டார். ஆனால் சரண் ஆஜராகவில்லை.
 
இதையடுத்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சரணுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
 
வளசரவாக்கம் போலீசார் சரணை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 3-ந்தேதி மீண்டும் விசார ணைக்கு வருகிறது. இதையடுத்து சரண் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தில் சரணடையக்கூடும் எனத் தெரிகிறது.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger