Thursday 29 December 2011

ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப் பொம்மை எரித்த ரஜினி ரசிகர்கள்!

 


ரஜினியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் இருந்தவர்களுக்கு இலவசமாக தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்து ஆதரவு தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இது அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பினர் நிருபர்கள். அவரிடம், 'அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளாரே... ரஜினியை ஆதரிக்கும் நீங்கள் இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டனர்.

அதற்கு நேரடியாக பதிலளிக்காத ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைமுகமாக தாக்கும் விதத்தில், "கறுப்புப் பணத்தில் கட்டிய மண்டபத்தில்தான் (ராகவேந்திரா மண்டபம்) ஹஸாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் நடக்கிறது. அப்படியும்கூட 10 பேர்தான் அங்கே வந்திருக்கிறார்கள். மண்டபத்தைக் கொடுத்தவருக்கு இது புரிந்தால் சரி", என்று கிண்டலடித்திருந்தார்.

இளங்கோவனின் இந்த பதிலைக் கண்டித்து வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்ட மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், அவரது உருவர் படங்களை எரித்தனர் ரசிகர்கள்.

"தலைவர் நல்ல விஷயம் என நம்பி இந்த மண்டபத்தைக் கொடுத்தார். அவருக்கு வேறு உள்நோக்கமில்லை. ஊழல் ஒழிய வேண்டும் என்பது மட்டும்தான் தலைவர் ரஜினியின் இலக்கு. ஹஸாரே என்றல்ல, யார் இந்த நல்ல காரியத்தில் இறங்கினாலும் அவர் ஆதரவு கிடைக்கும். அந்த கண்ணோட்டத்தில் பார்க்காமல், ரஜினி அவர்கள் கஷ்டப்பட்டு நேர்மையாக சம்பாதித்து கட்டிய ஒரு மண்டபத்தைப் பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் கேவலமாகப் பேசியதை ரசிகர்களான எங்களால் பொறுக்க முடியவில்லை.

இந்தியத் திரையுலகிலேயே நேர்மையாக அரசுக்கு வரி செலுத்துபவர்களில் முதலில் இருப்பவர் எங்கள் தலைவர் என்பதை இளங்கோவன் போன்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்," என்றார், இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய சோளிங்கர் என் ரவி.

இப்படி தான் நடக்க போகிறது...இதற்காக தான் இளங்கோவன் அப்படி பேசினார் என்பதை எமது நேற்றைய பதிவில் சொல்லி இருந்தோம் அதை படிக்க இங்கு செல்லவும்



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger