இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், மும்பையில் தான் புதிதாகக் கட்டி குடியேறியுள்ள வீட்டிற்கு ரூ.100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் முன்னணி வீரராக திகழ்பவர் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து அசத்தி வரும் இவர் பல நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி, மாதந்தோறும் பல கோடி ரூபாய்களை சம்பாதித்து வருகின்றார்.
இந்த நிலையில் சச்சின் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள பெரிகிராஸ் சாலையில் 5 மாடிகளை கொண்ட வீட்டை கட்டினார். இந்த வீட்டின் மதிப்பு ரூ.80 கோடி ஆகும். அடித்தளத்தில் கார் பார்க்கிங், வீட்டு பணியாளர்களுக்கு அறை, நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகளுடன் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டில், சச்சின் கடந்த செப்டம்பர் மாதம் குடியேறினார்.
இந்த வீட்டை சச்சின் ரூ. 100 கோடி அளவுக்கு இன்சூர் செய்துள்ளார். 2 பாலிசிகள் மூலம் அதை இன்சூரன்ஸ் செய்துள்ளார். முதல் இன்சூரன்ஸ் பாலிசி ரூ.75 கோடிக்கு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலிசி தீ விபத்து, தீவிரவாத செயல்கள், இயற்கை பேரழிவு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட சேதஙகளை உள்ளடக்கியது.
முதல் பாலிசி மூலம் சச்சினின் வீடு, வீடு அமைந்து உள்ள நிலம், சுற்றுச் சுவர், மின் சாதனங்கள், பாதுகாப்பு சாதனங்கள், தண்ணீர் ஆதாரம் உள்ளிட்டவற்றையும் உள்ளடங்கியுள்ளதாம்.
2வதாக ரூ.25 கோடிக்கு எடுக்கப்பட்டு உள்ள இன்சூரன்ஸ் பாலிசி மூலம் சச்சின் வீட்டில் வைக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் சாதனங்கள், சுவர் படங்கள், கடிகாரங்கள், மர சாமான்கள், மின்சக்தி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளது.
இந்த 2 பாலிசிகளையும் சேர்த்து மொத்தம் ரூ.100 கோடிக்கு சச்சின் தனது வீட்டை இன்சூரன்ஸ் செய்து உள்ளார். இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளுக்காக சச்சின் ஆண்டுத்தோறும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டும் என்று தெரிகிறது.
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி தனது வீட்டை ரூ.150 கோடிக்கும், நடிகர் ஷாருக்கான் தனது வீட்டை ரூ.110 கோடிக்கும், நடிகர் அமிதாப்பச்சன் தனது வீட்டை ரூ.100 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?