Wednesday, 21 September 2011

ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்: பிரபல நடிகர் போலீசில் புகார்

- 0 comments
 
 
 
 
 
 
பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய், மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ஜுகு போலீஸ் நிலையத்திலும் எழுத்து மூலம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். தாதா ரவி பூஜாரியின் குழுவைச் சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு, ஒருவன் தன்னிடம் ரூ.5 கோடி கேட்டு போனில் மிரட்டல் விடுத்து வருவதாக அதில் அவர் கூறியுள்ளார்.
 
பைனான்சியர் ஜவகர்லால் அகிச்சா கட்டளைப்படி, இந்த மிரட்டல் விடுக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார். விவேக் ஓபராய் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தவர் அகிச்சா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்குற்றச்சாட்டை அகிச்சாவின் வக்கீல் மறுத்துள்ளார்.



[Continue reading...]

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழ��்பு இல்லை : டிராய��� அறிக்கை

- 0 comments


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு இல்லை  டிராய் அறிக்கை2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்து உச்சநீதிமன்றம் வியப்பு தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் அவர்கள் ��ன்ன செய்தனர் என்பது கடுமையான விவாதத்துக்குரிய மேலும்படிக்க

http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    சினிமா நடிகையை த���ருமணம் செய்ய மா��்டேன் - நந்தா

    - 0 comments


    சினிமா நடிகையை திருமணம் செய்ய மாட்டேன் - நந்தா"வேலூர் மாவட்டம்" என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் நந்தா. இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நந்தாவிடம், நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர், "நிச்சயமாக நான் மேலும்படிக்க

    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    எஸ்.பி.பி.சரண் பக��ரங்கமாக மன்னிப்���ு கேட்க வேண்டும��: நடிகை சோனா

    - 0 comments


    எஸ்.பி.பி.சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகை சோனாநடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் வற்புறுத்தப்படுகிறது.

    புகாரை வாபஸ் பெற வேண்டுமானால் எஸ்.பி.பி. சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க மேலும்படிக்க

    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    பிரதமர் பதவிக்க��ன போட்டியில் நான் இல்லை: அத்வானி

    - 0 comments


    பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை அத்வானிபிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.

    பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி இன்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தை சந்திப்பதற்காக நாக்பூர் சென்றார். அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:- மேலும்படிக்க

    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    அக்டோபர் 17, 19களில�� உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவிப்பு

    - 0 comments


    தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியிட்டார்.

    உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மேலும்படிக்க

    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    மூத்த வீரர்கள் ஓ���்வு முடிவை தாங்��ளே எடுக்க வேண்டும் : கங்குலி

    - 0 comments


    மூத்த வீரர்கள் ஓய்வு முடிவை தாங்களே எடுக்க வேண்டும்  கங்குலிஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், மூத்த வீரர்கள் இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது சரி இல்லை மற்றும் தேர்வாளர்கள் அவர்களை விளையாட்டை விட்டு விலகவும் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.
    மேலும்படிக்க

    http://ahotstills.blogspot.com



  • http://ahotstills.blogspot.com

  • [Continue reading...]

    ஆர்எஸ்எஸ் நிபந்தனைக்கு பணிந்தார் அத்வானி-பிரதமர் பதவிக்கு போட்டியில்லை என அறிவிப்பு

    - 0 comments
     
     
    ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தவுள்ள பாஜக தலைவர் அத்வானி இன்று, அதற்காக ஆர்எஸ்எஸ் ஆதரவைக் கோரி அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார்.
     
    இந்த சந்திப்பையடுத்து, நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அத்வானி அறிவித்தார்.
     
    சமீபத்தில் ரத யாத்திரை நடத்தப் போவதாக அத்வானி அறிவித்தார். ஆனால், தங்களிடம் ஆலோசனை நடத்தாமலேயே, தன்னை வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்திக் கொள்ளும் திட்டத்துடன் இந்த யாத்திரையை அத்வானி அறிவித்ததால் ஆர்எஸ்எஸ் கடுப்பானது.
     
    இதனால், 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று அத்வானி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அவருக்கு அறிவுறுத்தியது. இதைச் செய்தால் மட்டுமே யாத்திரைக்கு ஆதரவு தருவோம் என்றும் ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
     
    வரும் அக்டோபர் 11ம் தேதி தனது யாத்திரையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள அத்வானி, ஆர்எஸ்எஸ்சின் இந்த கெடுபிடியால் அதிர்ந்து போனார்.
     
    வரும் தேர்தலில் ராகுல் காந்தியை காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தலாம் எனக் கருதும் ஆர்எஸ்எஸ், பாஜக சார்பில் இளையவர் ஒருவரை, குறிப்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, முன் நிறுத்தலாம் என்று கூறி வருகிறது.
     
    இந் நிலையில் அந்தப் பதவிக்கு அத்வானி மீண்டும் குறி வைப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. இதை அவரிடம் நேரில் சொல்லிவிட முடிவு செய்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அவரை நாக்பூருக்கு வருமாறு உத்தரவிட்டது.
     
    இந் நிலையில் தான் இன்று ஆர்எஸ்எஸ் தலைவரை நேரில் போய் சந்திதார் அத்வானி. அப்போது பிரதமர் பதவிக்கு நான் போட்டியிவில்லை என்று ஆர்எஸ்எஸ்சிடம் அத்வானி விளக்கினார்.
     
    பகவத்துடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அத்வானி, பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. ஆர்எஸ்எஸ், ஜனசங்கம், பாஜக என கட்சியில் ஒரு பகுதியாக இடம் பெற்றிருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
     
    ஒரு பிரதமருக்குக் கிடைப்பதை விட அதிகமானதை எனக்கு எனது கட்சியும் தொண்டர்களும் தந்துவிட்டனர். நான் இங்கு வந்தது எனது யாத்திரைக்கு ஆர்எஸ்எஸ் தலைவரின் ஆசிர்வாதம் பெறுவதற்காகத் தான்.
     
    எனக்கு தனது முழு ஆதரவையும் யாத்திரைக்கு முழு ஆசிர்வாதமும் தந்தார் பகவத். வரும் 24ம் தேதி பாஜக தலைவர் கட்காரி டெல்லி வருவார். எனது யாத்திரை குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றார்.
     
    இதற்கு முன்பு, அத்வானி 5 ரத யாத்திரைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊழலுக்கு எதிரான இந்த யாத்திரையை மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி, குஜராத்தில் இருந்து அத்வானி தொடங்குவார் என்றும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளான அக்டோபர் 11ம் தேதி தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வந்தது.
     
    இந்நிலையில், அத்வானியின் ரத யாத்திரை பிகாரில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. கடந்த 1990-ம் ஆண்டு அத்வானியின் ராம் ரத யாத்திரை, பிகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் யாதவால் தடுத்து நிறுத்தப்பட்டது. பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் உத்தரவின்பேரில் அத்வானியை கைது செய்தார் லாலு.
     
    அதன் நினைவாக அத்வானி இந்த முறை பிகாரில் இருந்தே தனது ரத யாத்திரையை தொடங்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ள பிகாரின் முதல்வர் நிதிஷ்குமார் இந்த ரத யாத்திரை தனது மாநிலத்தில் தொடங்குவதை விரும்பவில்லை.
     
    ஆனாலும் அவரது எதிர்ப்புக்குப் பணியாமல் இங்கிருந்துதான் யாத்திரையை தொடங்க வேண்டும் என்று அத்வானியிடம் பாஜக தலைவர்கள கூறியுள்ளனர்.
     
    இதற்கு அத்வானியும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அத்வானியின் ரத யாத்திரை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த தினமாக அக்டோபர் 11ம் தேதி, அவரது பிறந்த இடமான பிகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாரா என்னும் இடத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     
    குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்தைப் புறக்கணித்த ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அத்வானியின் ரத யாத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது.



    [Continue reading...]

    ஒரே இரவில் 8 பெண்களுடன் இத்தாலி பிரதமர் லீலை

    - 0 comments
     
     
     
     
     
    இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (74 ), லீலையில் மன்னனாக திகழ்கிறார். இவர் நடத்திய விருந்து நிகழ்ச்சிகளில் விபசார அழகிகள் கலந்து கொள்வர். அவர்கள் அரசு விமானங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அழைத்து வரப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
     
     
     
    இவர்களை புரோக்கர் தராந்தினி (36) என்பவர் ஏற்பாடு செய்ததாகவும், அதற்காக பெர்லஸ்கோனி பல லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிய வந்தது.
     
    இவை அனைத்தும் தராந்தினி மற்ற வர்த்தக பிரமுகர்களுடன் டெலி போனில் பேசிய பேச்சை ஒட்டு கேட்டதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
     
    பெர்லஸ்கோனி, ஒரே நாள் இரவில் அவர் 8 பெண்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
     
    பெர்லஸ்கோனி கடந்த 2009-ம் ஆண்டில் புரோக்கர் தராந்தினியுடன் டெலிபோனில் பேசிய பேச்சு டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     
     
    அதில், கடந்த நாள் இரவு எனது அறையின் வாசலில் 11 பெண்கள் "கியூ"வில் நின்றனர். அவர்களில் என்னால் 8 பேருடன் மட்டுமே லீலையில் ஈடுபட முடிந்தது. அதற்கு மேல் என்னால் முடியவில்லை என்று பேசியுள்ளார்.
     
     
    தற்போது இது இத்தாலி மக்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.



    [Continue reading...]

    அரசு கேபிள் டி.வியில் சன், ராஜ் டிவி சேனல்கள் வருமா.. வராதா?!

    - 0 comments
     
     
    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியில் விஜய் டிவி போன்றவை சேர்க்கப்பட்டாலும் பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்படும் சன் டிவி, ராஜ் டிவி சேனல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
     
    இந்த சேனல்கள் எப்போது சேர்க்கப்படும் என்பதில் தமிழக அரசிடம் உரிய பதிலும் இல்லை.
     
    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம், சென்னை தவிர்த்த, 31 மாவட்டங்களிலும் 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்த சேவையை கடந்த 2ம் தேதி தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
     
    ஆனால், இதில் மக்கள் விரும்பிப் பார்க்கும் பொழுதுபோக்கு, விளையாட்டு, செய்தி, குழந்தைகளுக்கான சேனல்கள் இல்லாததால் அரசு கேபிள் டிவி பெரும் தோல்வியடையும் நிலை நிலவுகிறது.
     
    இதையடுத்து பிரபலமான கட்டணச் சேனல்களையும் பெற்று இதில் ஒளிபரபப்ப குழு அமைக்கப்பட்டது. இதில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் (செலவினங்கள்), தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
     
    இந்தக் குழு கட்டணச் சேனல்களின் நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து விஜய் டி.வி. உள்பட ஸ்டார் குழுமத்தின் அனைத்துச் சேனல்களும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
     
    மேலும் ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏ.எக்ஸ்.என், எச்.பீ.ஓ, நேஷனல் ஜியோகிராபிக், என்.டி.டி.வி., சி.என்.என்-ஐபிஎன், டைம்ஸ் நௌவ், ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்டச் சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
     
    ஆனால், பெரும்பாலான மக்கள் பார்க்கும் சன் டிவி சேனல்களும், ராஜ் டிவி சேனல்களும் இதில் இன்னும் இடம் பெறவில்லை. இவை எப்போது அரசு கேபிளில் சேர்க்கப்படும் என்பதற்கும் அரசிடம் சரியான பதிலில்லை.
     
    இந்தச் சேனல்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மட்டும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



    [Continue reading...]

    கொக்கரித்த அழகிரி எங்கே? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

    - 0 comments
     
     
     
     
     
    அ.தி.மு.க. அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று கொக்கரித்த மு.க.அழகிரி இப்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. மதுரையை விட்டே காணாமல் போய்விட்டார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
     
    அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை ஓபுளாபடித்துறை எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 3 மாதத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார்.
     
    தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். இந்தியா மட்டும் அல்ல உலக தலைவர்களே பாராட்டும் வகையில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்தி வருகிறார்.
     
    தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்த கூட்டம் நாட்டைவிட்டே விரட்டப்பட்டு வருகிறது. ஆன்மீக நகரமான மதுரையை தி.மு.க.வினர் அழகிரியின் தலைமையில் செய்திட்ட அட்டகாசங்கள் அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கையால் இன்று ஒழிந்துவிட்டது. அதனால் தான் மதுரை மக்களால் இன்று ஒரு சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது.
     
    மீனாட்சி சுந்தரேஸ்வரர் பட்டணத்தில் ஆன்மீகம் நிறைந்த மதுரை மண்ணில் ஆடியவன் யாரும் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. கடந்த 2007ம் ஆண்டு அ.தி.மு.க. அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று கொக்கரித்த மு.க.அழகிரி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. மதுரையில் இருந்தே காணாமல் போய்விட்டார்.
     
    இதை நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார். ஆடியவர்களுக்கு எல்லாம் அன்றைய தினம் முடிவு கட்டடும் என்று அப்போதே தெரிவித்தேன். அது இப்போது நடந்துவிட்டது.
     
    தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு துறையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ததில் மட்டும் 634 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கேஸ் அடுப்புகள் வாங்கியதில் 164 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு பதிலாக போலி நகைகளை வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
     
    இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தப்பிக்க முடியாது. ஒருநாள் உள்ளே செல்லும் காலம் விரைவில் வரும். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை தேடிதந்ததை போல் உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார்.
     

     


    [Continue reading...]

    கூடங்குளம் பணிகளை நிறுத்தக் கோரி தமிழக அமைச்சரவை நாளை தீர்மானம்- உண்ணாவிரதம் வாபஸ்

    - 0 comments
     
     
     
     
     
     
    கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டப் பணிகளை நிறுத்துமாறு நாளை அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.
     
    கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை, கூடங்குளம் போராட்டக் குழுவினர் மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.
     
    முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக, டாக்டர் உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இக்குழுவில், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ், கன்னியாகுமரி மறைமாவட்ட ஆயர் லியோன் கென்சன், இடிந்தகரை குருவானவர் ஜெயகுமார், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் குழுவை சேர்ந்த லிட்வின், புஷ்பராயன், மைக்கேல், ஜோசப், வக்கீல் சிவசுப்பிரமணியன், ஞானசேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
     
    இன்று காலை அவர்கள் சாந்தோமிலிருந்து தலைமைச் செயலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
     
    அப்போது தங்களது கருத்துக்கள், கோரிக்கைகளை அவர்கள் முதல்வரிடம் விளக்கினர். தமிழக சட்டசபையிலும், அமைச்சரவையிலும் அணு மின் நிலையத்தை மூடக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
     
    இதையடுத்து நாளையே அமைச்சரவையைக் கூட்டி, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், பிரதமரிடம் போராட்டக் குழுவினர் நேரம் ஒதுக்க கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். எனவே உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
     
    இந்த உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.
     
    ஜெயலலிதாவை சந்தித்து பேசிய பிறகு வெளியே வந்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், இனிமேல் எங்களது போராட்டம் மத்திய அரசின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சாத்வீகமான முறையில் அமைதி வழி போராட்டமாக இருக்கும்.
     
    முதல்வரின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றாலும் மத்திய அரசக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். மாநில அரசுக்கும் முதல்வருக்கும் எங்களுடைய ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
     
    தமிழ் மண்ணில் இருந்து அணுமின் திட்டங்களை முழுமையாக அகற்றுவது அவசியமாகிறது. உலக அளவில் ஜெர்மனி, இத்தாலி போன்ற பல நாடுகளில் அணு உலைகளின் தீமைகளை புரிந்து கொண்டு அதை நிராகரிக்க போராடி உள்ளனர். இதை மற்ற நாடுகளும் பின்பற்றுகின்றன. எனவே எதிர்காலத்தில் இந்தியாவிலும் அணு மின் கொள்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும். மின் உற்பத்திக்கு எரிசக்தி மூலம் மாற்று வழியை கையாள வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம்.
     
    நாங்கள் போராட்டம் நடத்தியபோது எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதலவர் கூறினார் என்றார்.
     
    அதே போல மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமியும் முதல்வரை சந்தித்தார். அவரிடம், கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்தும், போராட்டம் குறித்தும் நாராயணசாமி விவாதித்தார். இடிந்தகரை சென்று போராட்டக் குழுவினரை சந்தித்துப் பேசியது குறித்தும் விளக்கினார்.
     
    பின்னர் வெளியில் வந்த அவர் கூறுகையில், முதல்வருடன் விவாதித்தது குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பேன். இந்த விவகாரத்தில் பிரதமர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். கூடங்குளம் மக்களின் மன நிலை குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினேன் என்றார் நாராயணசாமி.



    [Continue reading...]

    ரூ 2 கோடி வசூலித்த 'எங்கேயும் எப்போதும்'!

    - 0 comments
     
     
     
    ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் முதல் முறையாக தயாரித்த படம் எங்கேயும் எப்போதும்.
     
    ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த் நடித்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. நல்ல பப்ளிசிட்டியை ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டுக் கொடுத்து வந்ததால், படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு இருந்தது.
     
    அதன் விளைவு, தமிழகத்தில் 128 திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. ஆரம்ப வசூலாக தமிழகம் முழுவதும் ரூ 2 கோடியை ஈட்டியுள்ளது எங்கேயும் எப்போதும். முதல் மூன்று நாட்களில் சராசரியாக 80 சதவீத கூட்டத்துடன் ஓடியுள்ளது இந்தப் படம்.
     
    வணிக ரீதியாக படம் தப்பித்துவிட்டது என்ற செய்தியே, முருகதாஸையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தையும் மீண்டும் இணைய வைத்துள்ளது.
     
    அடுத்த படத்துக்கான வேலைகளில் இப்போதே களமிறங்கிவிட்டனர். அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என முருகதாஸும், பெரிய நட்சத்திரங்கள், பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமான படங்களைத் தரும் எங்கள் முயற்சிக்கு பெரிய உந்துதலைத் தந்துள்ளது எங்கேயும் எப்போதும் என பாக்ஸ் ஸ்டார் சிஇஓ விஜய் சிங்கும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
     
    இப்போது தமிழகத்தில் மட்டுமே வெளியாகியுள்ள எங்கேயும் எப்போதும், அடுத்த வாரம் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ரிலீசாகிறது.



    [Continue reading...]

    காதலி!உன்னை எப்ப���ி மறப்பேன்!

    - 0 comments


    எனது 9-9-2011 தேதியிட்ட "ஒரு பதிவர் மனம் திறக்கிறார் " என்ற பதிவில் எனக்குப் பிடித்த என் பழைய பதிவுகளை"மீள் பதிவா"கக் கொடுக்கப்போகிறேன் என்று சொல்லியிருந்தேன்.ஏற்கனவே ஒரு மீள் பதிவு வெளியிட்டு விட்டேன்.

    இப்போது ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று கவிதைப் பதிவுகளை ஒன்றாக இணைத்துத் தந்திருக்கிறேன்.சேர்த்துப் படிக்கும்போதுதான் தாக்கம் புரியும்.பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

    …………………….

    இன்னும் மறக்கவில்லை
    ..................................................

    சாந்தோம் கடற்கரையின்
    சாயங்கால நெருக்கங்கள்
    இன்னும் மறக்கவில்லை!

    கபாலி கோவில் பிரகாரத்தின்
    கண்பேசும் பாஷைகள்
    இன்னும் மறக்கவில்லை!

    புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
    உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
    இன்னும் மறக்கவில்லை!

    எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
    உன் எச்சில் பீச்மெல்பா
    இன்னும் மறக்கவில்லை!

    ஆனால்,

    நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு

    இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
    "என்னை மறந்து விடுங்கள்"

    அதை மறந்ததனால்தான் உன்னை
    இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

    இன்று--
    சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
    புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
    எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
    ஆனால்?
    அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?

    …………………………………

    சாந்தோம் சந்திப்புகள்

    காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
    பார்த்திருந்து பார்த்திருந்து ண்களும் நோகுதடி.

    எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
    எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?

    சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
    கிண்டலாய்க் கேட்பானோ"அக்கா வரல்லையா?"

    நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
    தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.

    அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
    (தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)

    சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
    மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?

    என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
    உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.

    அடியே!

    நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
    நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

    ………………………

    சாந்தோம் சந்திப்புகளின் முடிவு!

    இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

    ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

    நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

    மெல்ல வாய் திறந்தாய் "இரண்டு நாட்களாய்

    என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

    பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

    என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

    அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

    என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

    உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

    என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

    எஸ் மாப்பிள்ளை, அனைவருக்கும் சந்தோஷம்.

    என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

    எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

    ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

    ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

    மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

    உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

    என்னை மறந்து விடுங்கள்" என்றுரைத்துப் போய்விட்டாய்.

    உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

    "உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

    என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால் இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!
    "சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
    என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்"
    (கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

    (காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)




    http://tamilsmsgalatta.blogspot.com



  • http://tamilsmsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger