Wednesday, 21 September 2011

தமிழீழ இலட்சியத��திலிருந்து நாம் என்றுமே பின்னிற��கப் போவதில்லை!: ஜ���யானந்தமூர்த்தி



எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழம் என்னும் உன்னத இலட்சியத்திலிருந்து நாம் என்றுமே பின்னிற்கப் போவதில்லை. இதற்கு இன்றைய காலகட்டத்தில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் இல்லையேல் நாம் இந்த இலட்சியத்தை வென்றெடுக்க தொடர்ந்து போராடுவோம்.

இதற்கு பக்கபலமாக எமது புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டுமென ஜெனிவாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் ஆங்காங்கே சில நிகழ்வுகள் நடைபெற்றாலும் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றுதிரண்டு இருப்பதைப் பார்க்கும்போது நான் சந்தோசமடைகின்றேன்.

எமது மக்கள் வீழ்ந்து கிடக்கவில்லை, சோர்ந்துபோகவில்லை அவர்கள் எழுந்து நிற்கின்றார்கள் என்பதை இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட இப்பெருந்திரளான மக்களாகிய உங்களைக் காணும்போது நான் உணர்கின்றேன். தமிழன் என்றுமே வீழ்ந்ததில்லை அவன் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவான் என்பதை இது காட்டுகின்றது.

முள்ளிவாய்க்கால் என்பது எமது போராட்டத்தில் முடிந்த கதையல்ல. அது ஒரு அத்தியாயம். தமிழீழப் போராட்டம் என்பது எமது இலட்சியத்தை அடையும்வரை அதை எட்டும்வரை முடியப்போவதில்லை. போராட்டத்தின் தன்மைகள் மாறலாம் ஆனால் இலட்சியம் என்றுமே மாறப்போவதில்லை.

எமது இலட்சியமான தமிழீழம் என்பதை நாம் அடைந்தே தீருவோம். எமது இனத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் சில உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் துணையுடன் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது. எமது மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளனர். ஆண்டாண்டு காலமாக இது நடைபெற்றது.

இறுதியாக முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் இனப்படுகொலை நடந்துள்ளது. இன்றும் அது தொடர்ந்து வருகின்றது. எமது மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர் அங்கு இனப்படுகொலை இடம் பெற்றுள்ளது என்பதை சர்வதேசம் இன்று உணர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அதை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனால் எமது இனத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக இவை தற்போது கண்களைத் திறந்துள்ளன. எனவே இனப்படுகொலை எமது மக்கள் மீது நடந்துள்ளதை அறிவித்து இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தர சர்வதேசமும் ஐக்கியநாடுகள் சபையும் முன்வர வேண்டும்.

இனியும் எமது மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழவோ இலங்கையில் ஒருநாட்டுக்குள் வாழவோ முடியாது. எமது மக்களுக்கு வடகிழக்கு இணைந்த தனிநாடே தேவை. அதுவே தனியான தமிழீழம். நாம் இதைப்பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேசமெங்கும் போராடுகின்றோம். சர்வதேச சமூகத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றோம்.

இதைப்பார்த்து இன்று சிறிலங்கா அரசாங்கம் விழிபிதுங்கி பயந்துபோயுள்ளது, இன்னும் எமது பலத்தைக் காட்ட வேண்டும். எனவே எமது மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். இன்றுபோல் எதிர்வரும் காலங்களில் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.

எமது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் எமது விடுதரைலப் போராட்டத்தை புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்கின்றேன். அதிலும் இளையோர் புலம்பெயர் நாடுகளில் போராட வேண்டுமென மிகவும் தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்திருந்தார். அதை எமது புலம் பெயர் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதிலும் இளையோர் இதை புரிந்து கொள்ள வேண்டும். எமது போராட்டம் முள்ளிவாய்காலுடன் முடிந்துவிட்டதாக நினைத்தால் அது தவறு. எமது போராட்டம் இன்று சர்வதேச பரப்புவரை நீண்டிருக்கின்றது. ஊலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று அணிதிரண்டுள்ளனர். எமது தமிழக உறவுகள் ஒன்று திரண்டுள்ளனர்.

இன்று சர்வதேசம் எமது போராட்டத்தை உணர்ந்திருக்கின்றது. அதன் நியாயப்பாட்டைப் புரிந்திருக்கின்றது. எனவே எமது தலைவர் இப்போராட்டத்தை சர்வதேசத்திற்கு வியாபித்திருக்கின்றார். எனவே புலம் பெயர் மக்கள் தொடர்ந்து அகிம்சை ரீதியில் போராட வேண்டும். இதை அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும்.

புலம் பெயர் நாடுகளில் அகிம்சை ரீதியில் போராடுகின்றோம். நாம் நடத்தி வரும் அகிம்சைப்போராட்டத்தின் மூலம் எமது இனத்தின் மீது நடத்தப்பட்ட இனஅழிப்பை சான்றாகக் கொண்டு சர்வதேசம் எமக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரத் தவறுமானால் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்லவேண்டிய நிலை தோன்றும்.

அவ்வாறானதொரு நிலை தோன்றினால் அதற்கு சர்வதேசமே பொறுப்புக்கூற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். எமது தேசியத் தலைவர் ஏற்கனவே கூறியிருந்தார். "நாம் ஆயுதத்தை விரும்பியவர்களுமல்ல, ஆயுதத்தை நேசித்தவர்களுமல்ல, ஆனால் அது எம்மீது திணிக்கப்பட்டுள்ளது" என்று. எனவே நாம் அதை விரும்பவில்லை.

எனவேதான் அவ்வாறான நிலை இனியும் தோன்றாமல் இருப்பதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மிகவும் உணர்வு பூர்வமாக உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று பொங்கு தமிழ் நடைபெறுதற்கு முன்னதாக காலையில் இருந்தே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது,

ஆனால் பொங்குதமிழ் ஆரம்பமாகியதும் மழை ஒய்ந்து மறைந்திருந்த சூரியன் மீண்டும் தோன்றி ஒழியைத் தந்தான். அதுபோன்றே திடிரென எமது சூரியத்தேவனும் ஒருநாள் தோன்றுவான் அதை மக்கள் கண்டுகாணுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதுவரை நாம் ஓயக்கூடாது. எமது மக்களின் விடுதலைக்கான எமது கடமையைத் தொடர்ந்து செய்வோம்.

இது ஒவ்வொருவரினதும் கடமையாகும். என்று தெரிவித்த nஐயானந்தமூர்த்தி எமது புலம் பெயர் மக்கள் ஒற்றுமையுடனும் பலத்துடன் இருக்க வேண்டும். அதுவே எமது காலத்தின் தேவையாகும். இன்றைய நிலையில் எமது பலத்தையும் ஒற்றுமையையும் குலைக்கும் வசையில் சில சக்திகளின் பின்னணியில் சதித்திட்டங்கள் நடக்கின்றன.

இதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலக அமைப்பு தொடர்ந்து இயங்குகின்றது. அதாவது முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னர் எவ்வாறான கட்டமைப்பு இருந்ததோ அதே கட்டமைப்பே இன்றும் உள்ளன.

இதைவிட வேறு எக்குழுக்களுக்கும் மக்கள் ஆதரவை வழங்கத் தேவையில்லை. எனவே இதில் உறுதியாக இருந்து எமது இலட்சியத்தை வென்;றெடுப்போம்" என்றும் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger