Wednesday 21 September 2011

காதலி!உன்னை எப்ப���ி மறப்பேன்!



எனது 9-9-2011 தேதியிட்ட "ஒரு பதிவர் மனம் திறக்கிறார் " என்ற பதிவில் எனக்குப் பிடித்த என் பழைய பதிவுகளை"மீள் பதிவா"கக் கொடுக்கப்போகிறேன் என்று சொல்லியிருந்தேன்.ஏற்கனவே ஒரு மீள் பதிவு வெளியிட்டு விட்டேன்.

இப்போது ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று கவிதைப் பதிவுகளை ஒன்றாக இணைத்துத் தந்திருக்கிறேன்.சேர்த்துப் படிக்கும்போதுதான் தாக்கம் புரியும்.பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

…………………….

இன்னும் மறக்கவில்லை
..................................................

சாந்தோம் கடற்கரையின்
சாயங்கால நெருக்கங்கள்
இன்னும் மறக்கவில்லை!

கபாலி கோவில் பிரகாரத்தின்
கண்பேசும் பாஷைகள்
இன்னும் மறக்கவில்லை!

புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
இன்னும் மறக்கவில்லை!

எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
உன் எச்சில் பீச்மெல்பா
இன்னும் மறக்கவில்லை!

ஆனால்,

நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு

இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
"என்னை மறந்து விடுங்கள்"

அதை மறந்ததனால்தான் உன்னை
இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

இன்று--
சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
ஆனால்?
அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?

…………………………………

சாந்தோம் சந்திப்புகள்

காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து ண்களும் நோகுதடி.

எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?

சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோ"அக்கா வரல்லையா?"

நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.

அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)

சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?

என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.

அடியே!

நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

………………………

சாந்தோம் சந்திப்புகளின் முடிவு!

இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

மெல்ல வாய் திறந்தாய் "இரண்டு நாட்களாய்

என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

எஸ் மாப்பிள்ளை, அனைவருக்கும் சந்தோஷம்.

என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

என்னை மறந்து விடுங்கள்" என்றுரைத்துப் போய்விட்டாய்.

உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால் இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!
"சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்"
(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)




http://tamilsmsgalatta.blogspot.com



  • http://tamilsmsgalatta.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger