Wednesday, 21 September 2011

22வயது இளம்பெண்ணை துரத்தி துரத்தி கற்பழிக்க முயற்��ித்து கத்தியால் குத்திக்கொன்ற 70வயது கொடூரன் (படங்கள் இணைப்பு)



விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார்.

அரசு மருத்துவராக இருக்கும் இவர் இந்த தனியா மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையுடன் மருந்துக்கடையும் உள்ளது.

இதையும் இவரே நடத்திவருகிறார்.ராதாகிருஷ்ணனின் இரண்டாவது மனைவியின் மாமா ராஜசேகர் (வயது 70). இவர்தான் இந்த மருத்துவமனையின் மேற்பார்வையாளர்.

திருவண்ணைநல்லூருக்கு பக்கத்தில் உள்ள ஏனாதிமங்களத்தை சேர்ந்த சரண்யா( 22), இந்த மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

எழுபது வயது ராஜசேகர், இந்த இளம்பெண்ணிடம் நீண்டநாளாக சில்மிஷம் செய்து வந்துள்ளார். பொறுமையிழந்த சரண்யா, வீட்டில் அம்மாவிடம் முறையிட்டுள்ளார்.

அவர் வயசானவர், தப்பான எண்ணத்தில் எல்லாம் அப்படி செய்யமாட்டார். பேத்தி என்கிற முறையில் உன்னிடம் விளையாடியிருப்பார் என்று மகளுக்கு ஆறுதல் கூறி தொடர்ந்து அதே மருத்துவமனைக்கு வேலைக்கு அனுப்பினர்.

70 வயது கொடூரன்



ராஜசேகர், தொடர்ந்து சரண்யாவிடம் விளையாடினார். பேத்தியிடம் தாத்தா செய்யும் விளையாட்டு அல்ல இது என்பதை உணர்ந்தார் சரண்யா. அந்த அளவிற்கு ராஜசேகரின் சில்மிஷ விளையாட்டு அதிகமாகிக் கொண்டிருந்திருக்கிறது.

மீண்டும் வீட்டில் முறையிட்டிருக்கிறார் சரண்யா. கொஞ்ச நாள் பொறூமையாக இரு. அதற்குள் உனக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறேன். அதுவரை வேலைக்கு சென்றூவா என்று அனுப்பியுள்ளனர். தினமும் ராஜசேகரிடம் இருந்து தப்பித்து வருவதே சரண்யாவுக்கு பெரும் வேலையாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் சரண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

நேற்று சரண்யாவின் அம்மா, நீ வேலைக்கு போய், எல்லோரிடமும் இனி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வா என்று அனுப்பியிருக்கிறார்.

சரண்யாவும் மருத்துவமனைக்கு வந்து எல்லோரிடம் தனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அதனால் இனி வேலைக்கு வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று இத்தனை நாளூம் காத்திருந்த ராஜசேகருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. இனி சரண்யா வரமாட்டாள். அதனால் இன்று எப்படியாவது ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று சரண்யாவை வலுக்கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

அவள் மறுக்கவே, இவர் பிடிவாதம் செய்யவே, தள்ளிவிட்டு ஓடியிருக்கிறாள். மருத்துவமனைக்குள்ளேயே துரத்தி துரத்தி கற்பழிக்க முயற்சித்திருக்கிறார் ராஜசேகர். கடைசி வரை முயற்சித்தும் ஆசைக்கு இணங்கவில்லையே என்கிற ஆத்திரம் ஒருபக்கம், வெளியே விட்டால் இதை சொல்லி நம் மானத்தை வாங்கிவிடுவாள் சரண்யா என்கிற கலக்கம் ஒரு பக்கம் ராஜசேகரை வெறிபிடிக்க வைத்தது.

மருத்துவமனையில் இருந்து கத்தியை எடுத்து துரத்தி துரத்தி சரண்யாவை குத்தி ரத்த வெள்ளத்தில்

சாயத்தார்(ன்) ராஜசேகர். அதன் பின்னர் ஏதேதோ மாத்திரைகளை விழுங்கிவிட்டு தானும் உயிருக்கு போராடுவது போல் நாடகம் ஆடினார் ராஜசேகர்.

சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர்.

சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ளது.

சரண்யா திருடிவிட்டாள். அதனால்தான் கத்தியால் குத்தினேன் என்று கூறியுள்ளார் ராஜசேகர். திருவிட்டாள் என்று புகார் செய்ய வேண்டியதுதானே. அதற்கு ஏன் குத்தினாய் என்று இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விக்கு ராஜசேகரிடமிருந்து பதில் இல்லை.

ஒரு அப்பாவி இளம்பெண் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியும் இல்லை ராஜசேகரின் முகத்தில்.

http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger