பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடந்த கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செ.துரைசாமி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கொளத்தூர் மணி,
இந்த பரப்புரை பயணம் மூவருக்கான மரண தண்டனையை ரத்து செய்யுங்கள், மரண தண்டனை என்பதையே நீக்கி விடுங்கள் என்ற கருத்துக்களை உள்ளடக்கி, ஒரு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இந்த பயணத்தை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இப்போது நாம் மூன்று தமிழர்களின் உயிர் பாதுகாப்பு என்பதை தான் முதண்மை செய்தியாக பேசிக்கொண்டிருக்கிறோம். அதை இன்னும் விரிவாக மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லுகிறோம். தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை.
இந்த மூன்று தமிழர்களை பொருத்தவரை, வழக்கில் விசாரணை செய்தது ஒரு குழு. நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. இந்தவேளையில்தான் இரண்டு செய்திகளை மட்டும் நினைவு கூர்ந்து பாருங்கள். அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தலைவராக இருந்தவர் கார்த்திக்கேயன். அவர் சொல்லுகிறார். இந்த மூன்று பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டாம் என்று சொல்லுகிறார். உச்சநீதிமன்றத்தில் 4 பேருக்கான மரண தண்டனையை உறுதி செய்தவர்கள், அந்த ஆயத்தின் தலைமை வகித்த நீதியரசர் கே.டி.தாமஸ், அவர் சொல்லுகிறார் மரண தண்டனை வேண்டாம். இந்த மூன்று பேரையும் தூக்கில் ஏற்றாதீர்கள் என்று சொல்லுகிறார். விசாரித்தவர் சொல்லுகிறார், தீர்ப்பு சொன்னவர் சொல்லுகிறார் மரண தண்டனை வேண்டாம். அதனால் தான் நாம் அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்.
விசாரணையில் பல பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பு காவல்துறை திட்டமிட்டு செய்வதற்கும் வாய்ப்பு உண்டு. தவறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நீதிபதிகள் வெறும் சட்டத்தையும், தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும், சாட்சிகளை மட்டும் தான் பார்ப்பார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குற்றத்திற்கும் தீர்ப்புக்கும் இடையில் சமூகம் இருக்கிறது. சமூகத்தின் போக்குகளை, அரசியல் போக்குகளை இதில் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருந்தால் அதையும் குறித்து ஆய்வு செய்வதற்கு, அக்கறையோடு செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கிற வாய்ப்புதான் கருணை மனு. அதற்கு பெயர் கருணை மனு. ஆனால் நீங்களும் அதை யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட பிழை நேர்ந்திருக்கிறது. நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், நீங்கள் உணர்ந்து பாருங்கள் என்று கேட்பது தான். இவ்வாறு கொளத்தூர் மணி பேசினார்.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?