இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (74 ), லீலையில் மன்னனாக திகழ்கிறார். இவர் நடத்திய விருந்து நிகழ்ச்சிகளில் விபசார அழகிகள் கலந்து கொள்வர். அவர்கள் அரசு விமானங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அழைத்து வரப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்களை புரோக்கர் தராந்தினி (36) என்பவர் ஏற்பாடு செய்ததாகவும், அதற்காக பெர்லஸ்கோனி பல லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் தெரிய வந்தது.
இவை அனைத்தும் தராந்தினி மற்ற வர்த்தக பிரமுகர்களுடன் டெலி போனில் பேசிய பேச்சை ஒட்டு கேட்டதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெர்லஸ்கோனி, ஒரே நாள் இரவில் அவர் 8 பெண்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
பெர்லஸ்கோனி கடந்த 2009-ம் ஆண்டில் புரோக்கர் தராந்தினியுடன் டெலிபோனில் பேசிய பேச்சு டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த நாள் இரவு எனது அறையின் வாசலில் 11 பெண்கள் "கியூ"வில் நின்றனர். அவர்களில் என்னால் 8 பேருடன் மட்டுமே லீலையில் ஈடுபட முடிந்தது. அதற்கு மேல் என்னால் முடியவில்லை என்று பேசியுள்ளார்.
தற்போது இது இத்தாலி மக்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?