Saturday, 14 September 2013

இணையதளத்தை அதிர வைத்த ‘கோச்சடையான்’ டிரெய்லர் kotchadaiyan trailor

- 0 comments

இணையதளத்தை அதிர வைத்த 'கோச்சடையான்' டிரெய்லர்
by abtamil

சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கோச்சடையான்' பட டிரெய்லர் இந்த மாதம் 9ஆம் தேதி வெளியானது. 

இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே யூ டியூப், கூகுள் போன்ற டிஜிட்டல் அமைப்புகள் அனைத்திலும் இந்தப் படமே ஆக்கிரமித்திருந்தது. இணையதளத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் அதிகாரபூர்வமாக இடம்பெற்ற இந்தப் படமே யூ டியூபில் மிகவும் பிரபலமான ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக இப்படம் குறித்தும் ரஜினி குறித்தும் பிரச்சாரம் காணப்பட்டது. டிரெய்லர் வெளியிடப்பட்டவுடன் கிடைத்த வரவேற்பு வியப்பில் ஆழ்த்துவதாக அமைந்தது.

டிரைலர் துவக்கத்தில் 'நிறைய ஹீரோக்கள் இருக்கலாம், சூப்பர் ஹீரோக்களும் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் இருக்கின்றார்' என்ற அறிமுகத்துடன் இதுவரை கண்டிராத ரஜினியின் தோற்றம் வெளிப்படுகின்றது.

இந்த டிரைலரே அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது. இதில் அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் வெளியிடப்படவிருக்கும் இப்படம், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வினால் இயக்கப்பட்டு மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

[Continue reading...]

தமிழ்நாட்டின் போக்குவரத்திற்க ு உண்டான பதிவு தொடர் எண்கள். Tamilnadu vehicle registration number

- 0 comments

தமிழ்நாட்டின் போக்குவரத்திற்க
ு உண்டான பதிவு தொடர் எண்கள்.... World
Wide Tamil People

TN-01 சென்னை மத்தி (அயனாவரம்)
TN-02 சென்னை மேற்கு (அண்ணா நகர்)
TN-03 சென்னை வட
கிழக்கு (தண்டயார்பேட்டை)
TN-04 சென்னை கிழக்கு (பேசின்
பிரிட்ஜ்)
TN-05 சென்னை வடக்கு (வியாசர்பாடி)
TN-06 சென்னை தென்
கிழக்கு (மந்தவெளி)
TN-07 சென்னை தென் (திருவான்மியூர்)
TN-09 சென்னை மேற்கு (கே.கே. நகர் )
TN-10 சென்னை தென்
மேற்கு (வளசரவாக்கம்)
TN-11 தாம்பரம்
TN-16 திண்டிவனம்
TN-18 செங்குன்றம்
TN-19 செங்கல்பட்டு
TN-20 திருவள்ளூர்
TN-21 காஞ்சிபுரம்
TN-22 மீனம்பாக்கம்
TN-23 வேலூர்
TN-24 கிருஷ்ணகிரி
TN-25 திருவண்ணாமலை
TN-28 நாமக்கல்
TN-29 தர்மபுரி
TN-30 சேலம் (மேற்கு)
TN-31 கடலூர்
TN-32 விழுப்புரம்
TN-33 ஈரோடு
TN-34 திருசெங்கோடு
TN-36 கோபிசெட்டிபாளையம்
TN-37 கோயம்புத்தூர் (தெற்கு)
TN-38 கோயம்புத்தூர் (வடக்கு)
TN-39 திருப்பூர் (வடக்கு)
TN-40 மேட்டுபாளையம்
TN-41 பொள்ளாச்சி
TN-42 திருப்பூர் (தெற்கு)
TN-43 உதகமண்டலம்
TN-45 திருச்சிராப்பள்ளி
TN-46 பெரம்பலூர்
TN-47 கரூர்
TN-48 ஸ்ரீரங்கம்
TN-49 தஞ்சாவூர்
TN-50 திருவாரூர்
TN-51 நாகப்பட்டினம்
TN-52 சங்ககிரி
TN-54 சேலம் (கிழக்கு)
TN-55 புதுகோட்டை
TN-56 பெருந்துறை
TN-57 திண்டுக்கல்
TN-58 மதுரை (தெற்கு)
TN-59 மதுரை (வடக்கு)
TN-60 தேனீ
TN-61 அரியலூர்
TN-63 சிவகங்கை
TN-64 மதுரை (மத்திl)
TN-65 ராமநாதபுரம்
TN-66 கோயம்புத்தூர் (மத்தி)
TN-67 விருதுநகர்
TN-68 கும்பகோணம்
TN-69 தூத்துக்குடி
TN-70 ஓசூர்
TN-72 திருநெல்வேலி
TN-73 ராணிபேட்
TN-74 நாகர்கோயில்
TN-75 மார்த்தாண்டம்
TN-76 தென்காசி
TN-77 ஆத்தூர்
TN-78 தாராபுரம்

மேல இருக்கும் எண்களில் சில எண்கள்
விடுபட்டுள்ளன, உதாரணம் 08, 17, 26, 35,
44, 53, 62, 71, 80... ஏன் என்றால் அவையின்
கூட்டுத்தொகை 8..

வாகனங்களை பொருத்தவரை அவைகள்
துரதிர்ஷ்டமாக கருத படுகிறது. 8
என்பது சனி பகவானின் எண்ணாக
குறிப்பிடபடுகிறது. அதனால் தான்
வாகன எண்ணின்
கூட்டுத்தொகை எட்டு வந்தாலும் சிலர்
வாங்க மறுகின்றனர்...
ஆனால் நம் முன்னோர்கள்
வகுத்தது வேறு ஏதாவது காரணமாக
கூட இருக்கலாம்..
உங்களுக்கு வேறு காரணம் தெரிந்தால்
கூறுங்கள்...
உண்மையை அறியப்பெருவோம்,...

[Continue reading...]

மலையாளத்தில் அமலாபால் amala paul hot news

- 0 comments

மலையாளத்தில் அமலாபால்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil news

'சிந்து சமவெளி' படம் மூலம் தமிழி் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். 'மைனா' படம் மூலம் பிரபலமானவர். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'தாண்டவம்', 'தலைவா' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் இவர் பகத் பாசில் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை சத்யன் அந்திகாட் இயக்குகிறார். வித்தியாசாகர் இசையமைக்கிறார். இது ஒரு காதல் படமாக உருவாகிறது. பாலக்காடு போன்ற இடங்களில் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

சீரியல் நடிகைக்கு விஷால் மாதிரி மாப்பு வேணுமாமாம்..! (படங்கள் இணைப்பு) actor vishal

- 0 comments

சீரியல் நடிகைக்கு விஷால் மாதிரி மாப்பு வேணுமாமாம்..! (படங்கள் இணைப்பு)

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

திருமதி செல்வம், செல்லமே, பார்த்த ஞாபகம் இல்லையோ, என பிரபல தொடர்களில் நடித்து பிரபல சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளார் காவ்யா வர்ஷினி.

சன் டிவியில் சின்னச்சந்திப்பு நிகழ்ச்சியில் சமீபத்தில் பேட்டியளித்த காவ்யா வர்ஷினி தனக்கு விஷால் போல மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதுவரை யாரையும் காதலித்ததில்லை என்னும் காவ்யா, வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஆனால் எனக்குன்னு ஒருத்தரைப் பார்த்து பொறுமையாகக் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். நல்ல உயரமா கொஞ்சம் மாநிறமா இருந்தா போதும், பார்க்கிறதுக்கு விஷால் மாதிரி இருக்கணும் என்றார் காவ்யா.

பெற்ரோல்மெக்ஸ் லைட்டே தான் வேணுமா காவ்யா?

 

Show commentsOpen link

[Continue reading...]

சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி! Nirvaavana vidoe edutha maanavi

- 0 comments

சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, 13:40

சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து இன்டர்நெட் மூலம் லண்டனில் படிக்கும் காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழங்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுஜித்குமார்(22). இவர் லண்டனில் எம்பிஏ படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் பத்தனம்திட்டா அருகே கோன்னியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்தார். அப்போது இவருக்கும் அதே கல்லூரியில் படித்த புனலூரைச் சேர்ந்த மாணவி நிமிதாவுக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த வருடம் சுஜித்குமார் எம்பிஏ படிப்பதற்கு லண்டன் சென்றார்.

நிமிதா எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே மாரம்பிள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மாரம்பிள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அங்குள்ள லாட்ஜில் நிமிதாவும் 4 மாணவிகளும் தங்கி இருந்தனர். நிமிதா தனது லேப்டாப்பை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அங்கிருந்த மற்ற மாணவிகள் லேப்டாப்பை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அதில், கல்லூரியில் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகள் இருந்தன. இதுகுறித்து மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர். அவர் பெரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நிமிதாவிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: லண்டனில் படித்து வரும் காதலன் சுஜித்குமாரும், நிமிதாவும் போன் மற்றும் இன்டர்நெட்டில் அடிக்கடி பேசி வந்தனர். சமீபத்தில் சுஜித்குமார், நிமிதாவிடம் தன்னை லண்டனில் ஒரு ரவுடி கும்பல் பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க ரூ10 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய பெண்களின் நிர்வாண படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனவே பணமோ, படங்களோ அனுப்பி தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய நிமிதா, நிர்வாண படங்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு சுஜித்குமார் தனது வீட்டில் இருந்து வீடியோ கேமராவை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து கையடக்க கேமராவை எடுத்து வந்து விடுதியில் தங்கி தன்னுடன் படிக்கும் மாணவிகளின் நிர்வாண படங்களை எடுத்து இன்டர்நெட் மூலம் காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து நிமிதாவை கைது செய்த போலீசார் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஜாமீனில் விட நீதிபதி உத்தரவிட்டார். காதலன் சுஜித்குமார் தன்னை ரவுடி கும்பல் பிடித்து வைத்துள்ளனர் என்று கூறியது பொய்யான தகலாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதற்கிடையே லண்டனில் உள்ள சுஜித்குமாரை இந்தியா வரவழைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger