இணையதளத்தை அதிர வைத்த 'கோச்சடையான்' டிரெய்லர்
by abtamil
சினிமா ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கோச்சடையான்' பட டிரெய்லர் இந்த மாதம் 9ஆம் தேதி வெளியானது.
இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே யூ டியூப், கூகுள் போன்ற டிஜிட்டல் அமைப்புகள் அனைத்திலும் இந்தப் படமே ஆக்கிரமித்திருந்தது. இணையதளத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் அதிகாரபூர்வமாக இடம்பெற்ற இந்தப் படமே யூ டியூபில் மிகவும் பிரபலமான ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக இப்படம் குறித்தும் ரஜினி குறித்தும் பிரச்சாரம் காணப்பட்டது. டிரெய்லர் வெளியிடப்பட்டவுடன் கிடைத்த வரவேற்பு வியப்பில் ஆழ்த்துவதாக அமைந்தது.
டிரைலர் துவக்கத்தில் 'நிறைய ஹீரோக்கள் இருக்கலாம், சூப்பர் ஹீரோக்களும் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் இருக்கின்றார்' என்ற அறிமுகத்துடன் இதுவரை கண்டிராத ரஜினியின் தோற்றம் வெளிப்படுகின்றது.
இந்த டிரைலரே அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது. இதில் அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் வெளியிடப்படவிருக்கும் இப்படம், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வினால் இயக்கப்பட்டு மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?