Saturday, 14 September 2013

சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி! Nirvaavana vidoe edutha maanavi

சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, 13:40

சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து இன்டர்நெட் மூலம் லண்டனில் படிக்கும் காதலனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழங்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுஜித்குமார்(22). இவர் லண்டனில் எம்பிஏ படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் பத்தனம்திட்டா அருகே கோன்னியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்தார். அப்போது இவருக்கும் அதே கல்லூரியில் படித்த புனலூரைச் சேர்ந்த மாணவி நிமிதாவுக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த வருடம் சுஜித்குமார் எம்பிஏ படிப்பதற்கு லண்டன் சென்றார்.

நிமிதா எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே மாரம்பிள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் மாரம்பிள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அங்குள்ள லாட்ஜில் நிமிதாவும் 4 மாணவிகளும் தங்கி இருந்தனர். நிமிதா தனது லேப்டாப்பை ஆன் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அங்கிருந்த மற்ற மாணவிகள் லேப்டாப்பை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அதில், கல்லூரியில் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகள் இருந்தன. இதுகுறித்து மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர். அவர் பெரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நிமிதாவிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: லண்டனில் படித்து வரும் காதலன் சுஜித்குமாரும், நிமிதாவும் போன் மற்றும் இன்டர்நெட்டில் அடிக்கடி பேசி வந்தனர். சமீபத்தில் சுஜித்குமார், நிமிதாவிடம் தன்னை லண்டனில் ஒரு ரவுடி கும்பல் பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க ரூ10 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய பெண்களின் நிர்வாண படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனவே பணமோ, படங்களோ அனுப்பி தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய நிமிதா, நிர்வாண படங்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு சுஜித்குமார் தனது வீட்டில் இருந்து வீடியோ கேமராவை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து கையடக்க கேமராவை எடுத்து வந்து விடுதியில் தங்கி தன்னுடன் படிக்கும் மாணவிகளின் நிர்வாண படங்களை எடுத்து இன்டர்நெட் மூலம் காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து நிமிதாவை கைது செய்த போலீசார் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஜாமீனில் விட நீதிபதி உத்தரவிட்டார். காதலன் சுஜித்குமார் தன்னை ரவுடி கும்பல் பிடித்து வைத்துள்ளனர் என்று கூறியது பொய்யான தகலாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதற்கிடையே லண்டனில் உள்ள சுஜித்குமாரை இந்தியா வரவழைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger