ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் மந்திரவாதிகளை நம்புவது இப்போதும் வழக்கமாக உள்ளது. இதனால் எல்லா ஊர்களிலும் மந்திரவாதிகள் உள்ளனர். நோய் ஏற்பட்டால் மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதை விட மந்திரவாதிகளை தேடி செல்வதே அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள சான்டசியா என்ற இடத்தில் மந்திரவாதிகள் 6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை நடத்தி உள்ளனர்.
அந்த பெண்களை துண்டு துண்டாக வெட்டி அவர்களின் உறுப்புகளை எடுத்து சென்று இந்த பூஜைகளை செய்து இருக்கிறார்கள். மனித உறுப்புகளை வைத்து பூஜை செய்தால் பணக்காரர்கள் ஆகலாம் என்ற நம்பிக்கை தான்சானியாவில் பலரிடம் உள்ளது. அவர்கள் மந்திரவாதிகளை அமர்த்தி பெண்களை கொன்று பூஜை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விஷயம் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வன்முறையிலும் இறங்கினார்கள். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.