Home » Archives for 03/31/15
கெட்டும் குட்டிச்சுவராகி ========================= இருள் அவிழ்ந்துகொண்டிருக்கும் அந்த அறைக்குள் இதுவரை அகல்விளக்கொளியான எவரும் அடிமையில்லைதான் இனி எனக்குள் அவிரவேண்டாம் காரையிழந்த நான்கு அகச்சுவர்களின்மேல் கரிசனம் வேண்டாம் குட்டிச்சுவராக போவதென்பது அதை கட்டியபோதே இட்டவிதிபோல் அப்படியே போய்விட்டது ஆம்,, அப்படியே போய்விட்டது இறுக்கம் விட்டப் பின்னாலே புதிதான காரைவாசத்தையும் வண்ணத்துப் பூச்சுகளையும் ஏற்றுக்கொள்ளும் திடமுமில்லை அதற்கு ம்ம்ம் அது அபாயக்கரைதான் என்று அதற்குள் ஏற்பட்டு முடிந்தவைகளையும் நடவாததையுமாய் புரளி பேசிக்கொண்டிருக்கும் எத்தனையோ ஊர்க்கதைகளின் பின்னணியில் என்றாவது இடிபட்டு பாழடையும் வரையிலாவது அது கிடந்துவிட்டுப்போகட்டுமே அதனால் யாருக்கென்ன நஷ்டம் அதை அப்படியே விட்டுவிடுங்கள் யார் யாரோ அதில் வாழ்ந்துவிட்ட சுவடுகளோடு சொற்பநாட்களேனும் அங்கோர் மூலையில் அது கிடந்துவிட்டுப்போகட்டுமே ம்ம்ம்ம் ,, அனுசரன் |
[Continue reading...]