இது எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களிடமிருந்து வரும் சிறிய கருத்து ஆகும்.தயவு செய்து இதனை சமூக வலை தளங்களில் பகிரவும்.படிப்பறிவில்லாத மக்களுக்கும் எடுத்து செல்லவும்.
ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில் நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் என் தமிழக மக்களுக்கு ..
நாட்டின் எல்லை பகுதியை காவல் காக்க அனுப்பி வைத்த நீங்கள் நாட்டையும் அதன் மண்ணையும் விற்றுக்கொல்வது (எழுத்துப் பிழை அல்ல) வேதனையை தருகிறது.
நமது உயிராதாரமான மண்ணை நிலத்தை தெரிந்தோ தெரியாமலோ நாமும் ,தெரிந்தே ஆளும் அரசாங்கங்களும் அழித்து வருகிறோம்.
மீத்தேன்,அணு உலை என்று அனைத்து ஆபத்துகளையும் பாகுபாடில்லாமால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் சேர்த்து கொண்டிருக்க நாமும் நமது பங்கிற்கு ரியல் எஸ்டேட் பேராசையில் நமது விளை நிலங்களை விற்று தவறு செய்கின்றோம்.
நாளைய நாட்களில் நமது வீடுகளில் சமைத்த அரிசியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் சாப்பிட வேண்டியதாக இருக்கும்.அந்த நிலையில் அவர்களை மீறி தெற்காசியாவின் மாபெரும் நாடான இந்தியா ஒரு துரும்பை கூட கிள்ள இயலாது.
ஆயிரம் சாப்ட்வேர் இஞ்சினியர்களை உருவாக்குவது எளிது.ஆனால் ஓரடி விளை நிலத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.நாம நமது அவசியத்துக்கு மீறி வாங்கி குவிக்கும் ஒவ்வொரு விளை நிலமும் நமது குழந்தைகளுக்கான சுடுகாடு என்பதை உணர்வோமா?
பன்னாட்டு கம்பெனிகளுக்கு உள் நாட்டில் நிலம் கொடுத்து ஆள வைக்கும் அரசுகள் ,கட்சிகள், மக்கள் அனைவருக்கும் எங்களின் சிறிய கேள்வி என்னவென்றால் அப்புறம் எதற்காக மண்ணை காப்பாற்ற எங்களை எல்லையில் நிற்க வைத்துள்ளீர்கள்?
இந்த பொங்கல் திரு நாளில் ஒரு சபதம் எடுப்போம் .....விளை நிலங்களை விற்க மாட்டோம் எனவும் வாங்க மாட்டோம் எனவும். நன்றி .வணக்கம்.
விற்பதற்க்கும் தொலைப்பதற்க்கும் விளை நிலங்கள் வெறும் பணமல்ல ...அது நமது வாழ்வாகும் . தயவு செய்து பகிர மறக்காதீர்கள் .விவாதியுங்கள்.விதையுங்கள்.