பள்ளியில் சேர்த்த பிறகு , உங்கள் குழந்தை , அது ஆணோ , பெண்ணோ , எந்தக் குழந்தையாக இருப்பினும் , பள்ளியிலிருந்து வந்த சிறிது நேரத்தில் , மெதுவாக , அன்று காலையிலிருந்து , நடந்த விஷயங்கள் அனைத்தையும் , விளையாட்டு போல கேட்டு அறிந்து கொள்ளுங்கள் .
நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் , வந்த பிறகு , ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி , இதைக் கண்டிப்பாக கேட்டு அறியவும் .
ஒவ்வொரு நாளும் , குழந்தையிடம் , "இன்னிக்கு போலவே , தினமும் , நடந்தது எல்லாத்தையும் , நீ என்கிட்டே சொல்லிடணும்...சரியா , எதுக்கும் பயமே வேண்டாம் " என்று சொல்லிக்கொண்டு இருந்தால் தான் , அவர்கள் எதையும் தைரியமாகச் சொல்வார்கள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?