திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான தண்ணீர் கொட்டுகிறது. அருவியில்
குளிப்பதற்கு உள்ளூர் மக்களை தவிர வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும்
ஏராளமானோர் வருகிறார்கள்.
நேற்று மாலையில் சென்னையில் இருந்து சிலர் குடும்பத்துடன் அருவிக்கு குளிக்க வந்தனர். அதில் 20 வயதான இளம்பெண் ஒருவரும் இருந்தார். பெரியவர்கள் குளித்த பின்பு இளம்பெண் மட்டும் தனியாக அருவியில் குளித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அந்த பெண்ணின் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை அந்த பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை எச்சரித்து விடுவித்தனர்.