வியாசர்பாடி பி.வி.காலனி 25-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் ராகி (வயது16).
பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். கடந்த 15-ந்தேதி ராகி தனது தோழி வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இதையடுத்து சரவணன் மகளை பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுபற்றி சரவணன் எம்.கே.பி. நகர்போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் தனிப்படை அமைத்து மாணவி ராகியை தேடி வந்தார்.இந்த நிலையில் ராகி காணாமல் போனநாளில் இருந்தே அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் முனியப்பன் என்ற சுரேஷ் (40) என்பவரையும் காண வில்லை. சுரேஷ் அந்த பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். எனவே சுரேஷ் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ராகியை சுரேஷ் கடத்தி சென்றது தெரிய வந்தது.இதையடுத்து இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில் ராகியை சுரேஷ் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கடத்தி சென்றுகற்பழித்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் ராஜமுந்திரி சென்று மாணவி ராகியை மீட்டனர். சுரேசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?