அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2881 முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை–1 பதவிகளுக்கான போட்டித் தேர்வை
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டன. மீது முள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 662 பேர் தேர்வுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 57,134 ஆண்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 526 பெண்களும் அடங்குவர்.
பார்வைத் திறன் குறைவுடையோர் 971 பேரும், மாற்றுத் திறனாளிகள் 7535 பேரும் இத்தேர்வை எழுதுகிறார்கள்.
இதற்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 32 மாவட்டங்களில் 421 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை 8383 மேற்பார்வையாளர்கள் கண்காணிக்கிறார்கள்.