Wednesday 21 September 2011

உயிரைக் கொடுக்க��ம் உறவுகளுக்காக ஒரு நாளைக் கொடுப���பது கடினமா?



ஐ.நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுதந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா?

இலவச பேரூந்து வண்டிகள்

உயிருள்ளவரை வாழ்க்கைதான் என வாழும் ஓர் அழிக்கப்படும் இனத்தின் உறவுகளே!

ஐ நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுத்ந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா?

சர்வதேச சமூகத்தை எம்பால் ஈர்க்கவேண்டிய தேவையை, அதன் முக்கியத்தை நன்கு அறிந்த நாம், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?

192 நாட்டுத் தலைவர்களுக்கு எமினத்துக்கு நடந்தவற்றை நினைவுபடுத்த, இப்போ நடப்பவற்றை எடுத்துக் கூற, எமது எதிர்காலத் தேவையை எடுத்தியம்ப, இதைவிட வேறொரு சந்தர்ப்பம் இப்படிக் கிடைக்குமா?

எமது எண்ணிக்கையே எமது பலம் என்பதை அறிந்துமா இந்தத் தயக்கமும், தாமதமும்.

இலவச பேரூந்து வண்டிகள் உங்களுக்காக, உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

பொங்கு தமிழராய்ப் பொங்கியெழுவோம்! நியூயோர்க் நகரையே அதிரவைத்து ஜெனிவாவின் எண்ணிக்கையைப் பலமடங்காக்குவோம்.

ராஜபக்ச போகாத ஜெனிவாவுக்கு வந்தோர் தொகை10,000.

அந்தக் குற்றவாளி வரும் ஐ நா முன் எத்தனை தமிழர்கள் வருகிறார்கள்?

தமிழர் கூட வாழும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை வகிக்கும் கனடாவின் சக்தியை, அதன் பலத்தை ராஜபக்சவுக்கும், உலகிற்கும் எடுத்துக் காட்டுவோம்.

தொடர்புகளுக்கு: 647 822 8062 - 416 291 7474 - 647 209 4100

கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர் நா. க.த. அ
sivalingham@sympatico.ca

http://snipshot.blogspot.com



  • http://snipshot.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger