Img டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெண் அமைச்சர் கார் மீது தாக்குதல் unkown men attacked aam aadmi lady minister car
புதுடெல்லி, ஜன.5-
புதுடெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கட்சியில் 6 மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். 6 பேரில் ஒருவர் ராக்கி பிர்லா என் பெண்ணும் ஒருவர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
இன்று இவர் டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது. அப்போது கூடட்டதில் இருந்த அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கார் தாக்கப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இந்த தாக்குதலால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். போலீஸ் பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தவுடன் ஆடம்பர செலவுகளை குறைக்கும் வகையில் மந்திரிகளுக்கு அதிகப்படியான போலீஸ் காவல் தேவையில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
...