Tuesday, 30 July 2013

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான விடைகள்- இணையதளத்தில் வெளியீடு

- 0 comments
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’-ஜ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்  http://www.trb.tn.nic.in/ வினா வகை (ஏ,பி,சி,டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தால் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
[Continue reading...]

ஐ.பி.எல். சூதாட்டம் விசாரணை குழு சட்ட விரோதமானது

- 0 comments

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழுவை எதிர்த்து ஜார்க்கண்ட்– பீகார் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழு சட்ட விரோதமானது. ஒரு தலை பட்சமானது என்று தெரிவித்தது.

மேலும் புதிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோர்ட் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger