சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் ஜெயராம் சவுதா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.
இந்த விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் மீதான சூதாட்ட புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழுவை எதிர்த்து ஜார்க்கண்ட்– பீகார் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த விசாரணை குழு சட்ட விரோதமானது. ஒரு தலை பட்சமானது என்று தெரிவித்தது.
மேலும் புதிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோர்ட் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?