அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி
இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த 21-ம் தேதி போட்டி தேர்வு
நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1
லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய
அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’-ஜ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் http://www.trb.tn.nic.in/ வினா வகை (ஏ,பி,சி,டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தால் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?