Showing posts with label இணையதளம். Show all posts
Showing posts with label இணையதளம். Show all posts

Saturday, 1 March 2014

ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை

- 0 comments
காங். துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் கொலை

அசாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்
எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்காட்டில் ராகுல்காந்திக்கு முத்தம் கொடுத்த பெண்ணின் கணவரே அவரை எரித்து
கொலை செய்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் சுயஉதவி
குழுவினருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.


[Continue reading...]

Friday, 9 August 2013

குடித்துவிட்டு சக தோழியை கதறக் கதற கற்பழித்த நான்கு கல்லூரி மாணவிகள்

- 0 comments
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, கல்லூரி விடுதியில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.


சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.
[Continue reading...]

Wednesday, 19 June 2013

15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்

- 0 comments
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அல்வர் போலீஸ் நிலையத்தில் 15 வயது இளம் பெண்ணின் தந்தை நேற்று ஓர் புகார் மனுவினை அளித்தார்.

எனது மகளுடன் பேஸ் புக் மூலம் பழகிய அல்வர் பகுதியை சேர்ந்த சமீர் குமார் என்பவன் சில மாதங்களுக்கு முன்னர் தனிமையை பயன்படுத்தி அவளை கற்பழித்து விட்டான். இந்த காட்சிகளை செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்துக்கொண்ட அவன், அதை வைத்தே என் மகளை தொடர்ந்து பயமுறுத்தி உறவு வைத்துக்கொண்டான்.

தற்போது அந்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளான். அதை இணையதளத்தில் பார்த்த எங்கள் உறவினர் இந்த தகவலை என்னிடம் கூறினார்.

மைனர் பெண்ணை ஏமாற்றி, மிரட்டி, கற்பழித்து, அந்த காட்சிகளை இணைய தளத்திலும் பரப்பிய சமீர் குமாரை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
[Continue reading...]

Tuesday, 23 April 2013

இணைய தளத்தால் சீரழியும் இளம் பெண்கள் - நியூ கவர் ஸ்டோரி Young Girls

- 0 comments
 இணைய தளத்தால் சீரழியும் இளம் பெ
ண்கள் - நியூ கவர் ஸ்டோரி

இணையதள காதலால் பல இளம் பெண்கள் சீரழிந்து வருகிறார்கள். பலரது சோகக்கதையை அறிந்த பிறகும் இணையதள மோகத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வரிசையில் சென்னையில் ஒரு கல்லூரி மாணவி சீரழிந்து கதறிக்கொண்டு இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). எம்.பி.ஏ. படித்து கொண்டு இருக்கும் அவர் புராஜக்ட் செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.

தேனாம்பேட்டை பகுதியில் தங்கி இருக்கும் செல்வி அங்குள்ள கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடி செல்வார். அப்போது பேஸ்புக் மூலமாக கோகுலகிருஷ்ணன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் உரிமையாளரின் நண்பர் ஆவார்.

பேஸ்புக் மூலமாக புராஜக்ட் தொடர்பாக செல்வியும், கோகுலகிருஷ்ணனும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இதனால் கோகுலகிருஷ்ணன் மீது செல்விக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒருநாள் புராஜக்ட்டுக்கு உதவி செய்வதற்காக செல்வியை, கோகுலகிருஷ்ணன் ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றார். ஆட்டோ நேராக அம்பத்தூர் சென்றது. அங்கு ஒரு கட்டிடத்தின் அருகே சென்றதும் ஏற்கனவே நின்ற நண்பர்களிடம் செல்வியை அவர் அறிமுகம் செய்தார். பின்னர் அவர்களை அனுப்பி விட்டார்.

செல்வியை மட்டும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் பூட்டி வைத்து கற்பழித்தார். இதற்கு உடந்தையாக கம்யூட்டர் மைய உரிமையாளர் இருந்தார். அப்போது அவர்கள் செல்வியை ஆபாசமாகவும் படம் எடுத்துள்ளனர். அவர்களின் பிடியில் சிக்கிய செல்வி கதறி உள்ளார்.

உடனே கோகுலகிருஷ்ணன் எதுவும் தெரியாததுபோல் வெளியே சென்று விடு இல்லை என்றால் எனது நண்பர்களுக்கும் உன்னை விருந்தாக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த செல்வி கண்ணீருடன் வெளியேறினார்.

அதன்பிறகு கோகுலகிருஷ்ணன் ஆபாச செல்போன் படத்தை காட்டியே செல்வியை மிரட்டினார். சீரழிந்த செல்வி அவரிடம் நியாயம் கேட்டார். அப்போது உன்னை திருமணம் செய்கிறேன் என கூறி சமாளித்தார்.

பின்னர் ஒருநாள் செல்வியும், அவரது உறவினர்களும் கோகுலகிருஷ்ணனை தேடி சென்றுள்ளனர். அப்போது ஏற்கனவே ரகசியமாக வேறொரு பெண்ணை கோகுலகிருஷ்ணன் திருமணம் செய்த குட்டு உடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி கண்ணீருடன் நடந்த சம்பவத்தை மனுவாக எழுதி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இணையதளம் மூலம் ஏமாறும் இளம்பெண்களுக்கு செல்வி சீரழிந்த கதையும் ஒரு சாட்சியாக இருக்கட்டும்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger