Saturday 10 January 2015

Tamil Galatta jokes collection of year 2050

- 0 comments

Tamil Nadu in 2050
2050 ல் தமிழ்நாடு

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் சுமூகமாக தீர்த்து வைக்க மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

* 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை 'கேப்டன்' விஜயகாந்த் கண்டுப்பிடித்தார்.

* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனு, பேரறிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.

* உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடான சீனாவின் சாதனையை இந்திய முறியடித்தது.

* நாளை முதல் 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு. 10,000ரூ, 20,000ரூ, 50,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பால் விலை லிட்டருக்கு 800 ரூபாய் குறைப்பு. தாய்மார்கள் மகிழ்ச்சி.

* எந்த நிலையிலும் மருதநாயகம் படம் வெளியாகும். கமலஹாசன் தனது பேரனின் திருமண விழாவில் அறிவித்தார்.

* இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் சிறைப்பிடிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் பதட்டம் நீட்டிப்பு. வைகோ, நெடுமாறன் கண்டனம்.

* அரசு வழங்கி வரும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கார் வழங்கும் திட்டத்தில், ஊழல் நடந்துள்ளதாக எதிர் கட்சியினர் வெளி நடப்பு.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு விவசாயம் குடும்பம் கண்டுபிடிப்பு.

* வீட்டுக்கு மின்சாரம் தருவதாக கூறி 6 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது.மேலும் இதுபோன்ற தமிழ் நாட்டில் இல்லாத விசயங்களை கேட்டு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு டி.ஐ.ஜி கூறினார்.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைந்து,இன்று முதல் 968/லி க்கு விற்கப்படுகிறது.

* ரஜினியின் புதிய படத்தில்,ரஜினிக்கு ஜோடியாக நடிகை சமந்தாவின் மகள் நடிக்கிறார்.

* சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பவர் ஸ்டாருக்கு வழங்கப்பட்டது.

* தங்க விலை உயர்வு.ஒரு கிராம் தங்கம் 18,058 ரூபாய்க்கும்,ஒரு சவரன் 1,34,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

---------நன்றி--------

[Continue reading...]

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க

- 0 comments

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க..
01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/
02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200/-
03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/
04 ) நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500/-
05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/-
06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500
07) களை எடுக்க.ரூ.600/-
08) அறுவடை ரூ.3000/-
09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/-
மொத்தம் : ரூ. 19,750/-
மொத்த உற்பத்தி/
ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ)

அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/-
லாபம் :
ஏக்கருக்கு ரூ. 5750/-
மழை , வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான்
இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான்.
ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம் ,
மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம்.

-"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்" .

- என்றார் திருவள்ளுவர்.

யாரும் யாரையும் தொழ வேண்டாம்.
உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள்.

மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும்.சோறு  இல்லையெனில் ?
உலகுக்கே சோறு போடும் விவசாயியை தன் காலில் விழச்செய்யும் இந்த அரசும் நாடும் நாசமாய் போகாதா ?

உணர்ந்தவர்கள் forward பண்ணுங்கள்....

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger