Friday 31 October 2014

கத்தி வைரல் ஃபீவர்

- 0 comments
ஹிட்டான படங்களுக்குப் பின் சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கைதான். இந்த முறை கதை என்னுடையது என ஒருவர் கிளம்பியது சென்றவாரம் இணையத்தில் சூடான விவாதமானது. ஆதாரத்துடன் கிளம்பி தன் படத்தின் ஸ்டில்களை முகநூலில் வெளியிட்டுள்ள அந்த இயக்குநரின் பெயர் நட்ராஜ் கோபி. 'மெட்ராஸ்' படத்தின் கதையும், 'கத்தி' படத்தின் கதையும் தன்னுடையது என்று அவர் சொல்லி இருக்கிறார். 'கருப்பர் நகரம்' என்ற பெயரில் தான் எடுத்துவரும் படத்தில் உதவி இயக்குநராக 'அட்டகத்தி' பா.ரஞ்சித் பணிபுரிந்து வந்ததாகவும் அதன் பிறகு படம் பாதியில் நின்றபோது அவர் தனித்து படம் இயக்கியதாகவும் சொல்லி இருக்கிறார். கருப்பர் நகரத்தின் கதையும் வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பேசுவதாகத்தான் அமைத்திருந்தாராம். அதேபோல 'கத்தி' படம், 'மூத்த குடி' என்ற தலைப்பில் தான் வைத்திருந்த ஸ்க்ரிப்ட்டை ஏ.ஆர்.முருகதாஸிடம் தந்தபோது அவரே தயாரித்து இயக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி ஒரு வருடம் கதை கேட்டதாகவும் பிறகு கழட்டிவிட்டு 'கத்தி' படத்தை தன் அனுமதி பெறாமலே இயக்கிவிட்டதாகவும் சொல்லி இருக்கிறார். சம்மந்தப்பட்டவர்கள் இதை மறுத்து அடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டார்கள். ஆனால், நட்ராஜ் கோபியின் நண்பர்கள் இணையத்தில் காரசாரமாக விவாதித்துவருகிறார்கள். நிஜமா டைரக்டர்ஸ்?



'அயர்ன் மேன்' படங்களின் பகுதி களுக்கு விடை கொடுத்த ராபர்ட் டௌனி அடுத்து வர விருக்கும் 'அவெஞ்சர்ஸ் 2' மற்றும் 3 படங்களில் கடைசியாக அயர்ன் மேனைக் காணலாம்' என 'அவெஞ்சர்ஸ்' டிரெய்லர் வெளியீட்டில் சொல்ல பல ரசிகர்கள் அதற்கு வருத்தம் தெரிவித்தனர். இதனையடுத்து தற்போது வெளியான 'அவெஞ்சர்ஸ் 2' படத்தின் டிரெய்லர் நான்கு நாட்களில் மூன்று கோடிகளைக் கடந்து வைரலில் சாதனை படைத்துள்ளது. முழுக்க முழுக்க ராபர்ட் டௌனியின் 'அயர்ன் மேன்' கெட்டப்பை மையமாக வைத்து வெளியான இந்த ட்ரெய்லருக்கு ஏகபோக வரவேற்பு. எனினும் 'அயர்ன் மேன்' பாகங்களுக்கு குட் பை சொன்னது சொன்னதுதான் என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ராபர்ட். நல்லாத்தானே போய்க்கிட்டுருக்குது!



அனிருத் இசையில் வெளியான 'கத்தி' படத்தின் 'ஆத்தி என நீ' என்ற பாடல் காப்பியடிக்கப்பட்டது என வைரலோ வைரலாக, இன்னொரு தரப்பு இது யூடியூப் 'இன்னோ கங்கா'வின் ரீமிக்ஸ் என கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதையும் தாண்டி ஒரிஜினல் DVBBS & Tony Junior - Immortal என்னும் ஆங்கிலப் பாடல் இப்போது வைரலில். விடுவார்களா நெட்டிசன்கள். கழுவி ஊற்றுகிறார்கள். ஆனாலும் சின்ன லூப் மட்டுமே இந்த பாடலில் இடம் பிடித்துள்ளது. என்னதான் நடக்குது இங்க!

[Continue reading...]

கன்னியாகுமரி மாவட்டம் சிறப்பு பார்வை

- 0 comments

தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம்
முக்கிய பயிர்வகைகள்
அரிசி - 400 ச.கி.மீ
தென்னை - 210 ச.கி.மீ
ரப்பர் - 194.78 ச.கி.மீ
மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
வாழை - 50 ச.கி.மீ
பருப்பு - 30 ச.கி.மீ
முந்திரி - 20 ச.கி.மீ
பனை - 16.31 ச.கி.மீ
மாம்பழம் - 17.70 ச.கி.மீ
புளி - 13.33 ச.கி.மீ
கமுகு - 9.80 ச.கி.மீ
பலா - 7.65 ச.கி.மீ
கிராம்பு - 5.18 ச.கி.மீ
கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்
குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர்
ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

[Continue reading...]

மூவேந்தர்கள்தான் முக்குலத்தோர்

- 0 comments

மூவேந்தர்கள்தான்  போர்க்குடிகள் ஆவர்கள் இவர்களே முக்குலத்தோர்.    இவர்களில்  திணை ரீதியாக வெட்சி,கரந்தை,தும்பை,வாகை,உழிஞை என பிரிவுகள் உண்டு.

இத்தினை ரீதியாகவே கள்ளர் மறவர் அகமுடையார் எனப்படுகின்றனர்,

வெட்சி மாலை சூடுபவர்களே வெட்சி ஆறலை கள்வர் எனப்பட்டனர். சங்க இலக்கியங்கள் மன்னர்களை வெட்சி சூடவே அழைக்கின்றன. "மறை முது முதல்வன் பின்னர் மேல 23 பொறையுள் பொதியிற் பொடும்பன் பிறர் நாட்டுக் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய் யயோனே" என கள்ளர்களை கவரவே அழைக்கின்றன.

சோழ மன்னர்களின் கள்வர்களே இவர்கள் அன்டை நாட்டை கவர்தலே இவர்கள் குலத்தொழில். இராஜேந்திரசோழன் கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என்ற பட்டக்களின் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம், அன்டை நாட்டை கவர்ந்து கொண்டான் என்பதை இதன் பொருள்.

சில மூடர் வரலாற்றை மாற்ற நினைப்போர்கள் கள்ளர்களை திருடர் என்று தவறான ஒரு கருத்தை கூறி தமிழர்களின் உன்மையான வரலாற்றை தவறாக பேசி வரலாற்றை மறைக்கும் வேலையை செய்கின்றனர்.

உன்மை என்னவென்றால் சோழர்களும் கவர்தலே செய்தனர் அதுவே கள்ளர்கள்.

வாழ்க சோழர் புகழ்
வளர்க சோழ வம்சம்.

தேவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடுகிறது.

தேவர்கள் உபயோகிக்கும் ஆயுதமான வளரியை பற்றி சங்க இலக்கிய பாடல்கள் கூறுகின்றது.
வேறு எந்த இனத்தினரோ அல்லது வேறு மாநிலத்தாரோ பயன்படுத்தியதற்கான ஆதாரம் கிடையாது ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் வளரியை கள்ளரும்,மறவர்களும் அகமுடையரும் பயன்படுத்தியதாக ஆங்கிலயேயரின் ஆவணங்கள் கூறுகின்றது. "

முக்குலமே சோழ நாட்டில் சங்கமிப்போம்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger