தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயம்
முக்கிய பயிர்வகைகள்
அரிசி - 400 ச.கி.மீ
தென்னை - 210 ச.கி.மீ
ரப்பர் - 194.78 ச.கி.மீ
மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ
வாழை - 50 ச.கி.மீ
பருப்பு - 30 ச.கி.மீ
முந்திரி - 20 ச.கி.மீ
பனை - 16.31 ச.கி.மீ
மாம்பழம் - 17.70 ச.கி.மீ
புளி - 13.33 ச.கி.மீ
கமுகு - 9.80 ச.கி.மீ
பலா - 7.65 ச.கி.மீ
கிராம்பு - 5.18 ச.கி.மீ
கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்
குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ரப்பர்
ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம்,செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.
மீன் பிடிப்பு
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?