Saturday, 2 March 2013

அக்கா தங்கை கற்பழிப்பு

- 0 comments

டிசா மாநிலம் பாதாம் பகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுபாடா கிராமத்தை சேர்ந்த அக்காள்- தங்கை இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்கள். மலைவாழ் சிறுமிகளான இவர்களை பெற்றோர் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் 2 சிறுமிகளும் பேஜாபஞ்ச் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களது வீட்டில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் 2 சிறுமிகளின் உடல்களும் கிடந்தன. மர்ம கும்பல் அவர்களை கடத்தி சென்று கற்பழித்து கொன்று உடல்களை வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த கற்பழிப்பு சம்பவத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதில் ஒருவர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 376 (ஜி) கும்பலாக சேர்ந்து கற்பழித்தல், 302 (கொலை) உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட அந்த வாலிபரும் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த வாலிபர் சிக்கினால்தான் சிறுமிகளை கற்பழித்து கொன்றது யார்- யார் என்று தெரியவரும்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger