Tuesday, 8 October 2013

வில்லனாக விஸ்வரூபமெடுக்கும் கமல்ஹாசன் actor kamal latest news

- 0 comments

வில்லனாக விஸ்வரூபமெடுக்கும் கமல்ஹாசன்

by பாட்டு ரசிகன்

விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படத்துக்கு உத்தம வில்லன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார். 

லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம். 

ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார் இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார். 

கமல்  படத்தை இயக்குவது குறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், "கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் 'சதிலீலாவதி' படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன். மெகா பட்ஜெட் படமாக தயாராகிறது. 

இப்படத்துக்கு 'உத்தம வில்லன்' என பெயர் வைத்துள்ளோம். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. நானும் கமலும் பலதடவை சந்தித்து பேசி இதன் கதையை தயார் செய்துள்ளோம். 

காமெடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் அனைத்தும் படத்தில் இருக்கும். கமல் இதுவரை நடிக்காத பாத்திரம் என எதுவும் இல்லை. ஆனால் இதில் அவர் நடிப்பது ரசிகர்களை ரொம்ப கவரும் வேடமாக இருக்கும்," என்றார்.
Show commentsOpen link

[Continue reading...]

அப்பாவி, நல்லவன், வில்லன்: கோச்சடையானில் ’3 முகம்’ காட்டும் ரஜினி three roll rajini in kotchadaiyan

- 0 comments

அப்பாவி, நல்லவன், வில்லன்: கோச்சடையானில் '3 முகம்' காட்டும் ரஜினி

by abtamil

சென்னை: கோச்சடையான் படத்தில் ரஜினி 3 வேடங்களில் நடித்துள்ளார். அதில் வில்லத்தனம் செய்யும் வேடத்தில் ரஜினி பட்டையை கிளப்பியிருக்கிறாராம். கோச்சடையான் படத்தில் அப்பா, மகன் என்று 2 வேடத்தில் ரஜினி நடித்துள்ளார் என்றே செய்திகள் வந்தன. இந்நிலையில் அப்படத்தில் ரஜினி அப்பா, மகன்கள் என்று 3 வேடத்தில் நடித்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. மூன்று முகம் படத்திற்கு பிறகு ரஜினி இந்த படத்தில் 3 கெட்டப்பில் வருகிறார்.

அப்பாவி அப்பா அப்பா வேடத்தில் வரும் ரஜினி மிகவும் அப்பாவியாக இருப்பாராம். அப்பா ரஜினிக்கு ஷோபனாக ஜோடியாக நடித்துள்ளார்.

நல்ல மகன் 2 மகன்களில் ஒரு மகன் அர்ஜுனன் போன்று எண்ணம் கொண்ட நல்லவனாக இருப்பாராம். அவருக்கு தான் தீபிகா ஜோடியாம்.

கெட்ட மகன் மற்றொரு மகன் துரியோதனன் போன்ற குணமுள்ள வில்லனாக இருப்பாராம். வில்லனுக்கு ஜோடி இருக்கிறதா இல்லையா என்பதை ரகசியமாக வைத்துள்ளார்களாம்.

தூள் கிளப்பிய ரஜினி வில்லன் மகன் வேடத்தில் ரஜினி பட்டையை கிளப்பியுள்ளாராம். வில்லனாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

Show commentsOpen link

[Continue reading...]

கொலை செய்யப்பட்டாரா நடிகை ஜியா கான்? Actress jiya khan murder

- 0 comments

கொலை செய்யப்பட்டாரா நடிகை ஜியா கான்? அதிர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் தாய்
by admin
TamilSpyToday,

பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொள்ளவில்லை மாறாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் ராபியா அமின்தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரை தற்கொலைக்கு தூண்டிய அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பெல்ட்டால் கழுத்து நெறிக்கப்பட்டு ஜியா கான் மரணம் அடைந்துள்ளதாக தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜியா கான் இறந்த பின் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவரது தாய் ராபியா வெளியிட்டுள்ளார்.

நடிகை ஜியா கானின் கழுத்து பெல்ட்டால் நெறிக்கப்பட்டதற்கான ஆதாரம் அவரது உடலில் இருந்ததாக தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியா கான் பெல்ட்டால் கழுத்தை நெறிக்கப்பட்ட பிறகே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்று ராபியாவின் வழக்கறிஞர் தினேஷ் திவாரிதெரிவித்துள்ளார்.

துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொண்டவரின் கழுத்தில் இவ்வளவு ஆழமான காயம் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

ஜியா கான் மரணம் கொலை என்றும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ஜியா பிணமாகத் தொங்கிய அறைக்கு பக்கத்து அறையில் ரத்தம் கிடந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

வீட்டில் ஏசி ஓடியபோதும் ஜன்னல் திறந்துள்ளது. அதனால் ஜன்னல் வழியாக யாராவது வந்து ஜியா கானை கொன்றிருக்கலாம் என்று அவரது தாய் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.





Show commentsOpen link

[Continue reading...]

முதல்வரின் செல்லமான நடிகை நயந்தாரா ஏன் வரவில்லை? Nayanthara latest news

- 0 comments

நயந்தாரா ஏன் வரவில்லை?
by admin

TamilSpyToday,

அவமானம், வெட்கம், துக்கம் என்று இன்னும் எத்தனை காலத்துக்குதான் இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவை நார் நாறாக கிழிக்க போகிறார்களோ தெரியாது.

ஆனால் இவ்வளவு களேபரத்திலும் ஒரு விஷயத்தை கவனிக்க மறந்துட்டோமே என்று அடித்து பிடித்துக் கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நிருபர்கள். அதென்ன?

நடிகை நயன்தாரா இந்த விழாவை அடியோடு புறக்கணித்துவிட்டார். இவர் திட்டமிட்டு புறக்கணித்தாரா? அவரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள யாராவது அழைத்தார்களா? இல்லை, அவர்களும் இவரை மறந்துவிட்டார்களா? இப்படி ஓராயிரம் கேள்விகளோடு உலா வர ஆரம்பித்தால் கிடைக்கிற தகவல் ஐயோ அப்பா ரகம்.

பிலிம் சேம்பரிலிருந்து நயன்தாராவுக்கு அழைப்பு போனதாம். நீங்க ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடணும் என்று அவர்கள் சொல்ல, அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லே என்று கூறிவிட்டாராம் அவர். அப்புறமும் விடாமல் வற்புறுத்தியவர்களிடம், சரி எவ்வளவு கொடுப்பீங்க என்றாராம். பொதுவாக ஒரு டான்சுக்கு இருபது லட்சம் வாங்குகிறாராம் அவர். சமீபத்தில் பிலிம் சேம்பர் நடத்திய விழாவில் இவ்வளவு ரூபாய் வாங்கிக் கொண்டுதான் ஆடியிருக்கிறார் அவரும்.

சேம்பர் சொன்ன ரேட்டும் நயன்தாரா கேட்ட தொகையும் குள்ளமணிக்கும் நெப்போலியனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருந்ததாம். நான் விழாவுக்கே வரல என்று அவர் நேரடியாகவே கூறிவிட்டதாக தகவல். அப்படியென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே?

அப்படியெல்லாம் முடியவே முடியாது. ஏனென்றால் இந்த விழா நடைபெறும் தினங்களில் அவர் ஸ்பெயினில் இருந்தாராம். முக்கியமான படப்பிடிப்பு. முன்பே தேதிகள் கொடுத்தாச்சு என்கிற சால்ஜாப்புகளை சங்கம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏனென்றால் உள் நாட்டு படப்பிடிப்புகளுக்குதான் விடுமுறை. வெளிநாட்டில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படப்பிடிப்புகளை தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஏற்கனவே சங்கம் கூறிவிட்டதாம்.

இது ஒரு புறமிருக்க, முதல்வருக்கும் இவர் மீது கோபம் வர வாய்ப்பில்லை என்கிறார்கள். சுனாமி நிவாரண நிதியாக பத்து லட்சம் ரூபாய் பணத்துடன் அந்த நேரத்தில் போய் அம்மாவை சந்தித்த முதல் தமிழ் நடிகை நயன்தாராதான். அந்த பிளாஷ்பேக் இப்போது வந்து காப்பாற்றுமல்லவா?

Show commentsOpen link

[Continue reading...]

ரஜினி மகளின் முதல் மாப்பிளை நான்தான் – புதிய சர்ச்சையால் பரபரப்பு ishwarya old lover

- 0 comments

ரஜினி மகளின் முதல் மாப்பிளை நான்தான் – புதிய சர்ச்சையால் பரபரப்பு

by admin
TamilSpyYesterday,

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி பின்னர் 2004 நவம்பர் மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன் நடிகர் தனுஷ்-யை கல்யாணம் செய்து கொண்டார். இருவரும் திருமணமான ஆரம்பகாலத்தில் மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் குடும்பம் நடத்தினார். ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப வாழ்கையில் புயல் வீச துவங்கியுள்ளது. ஐஸ்வர்யா, தனுஷ் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரையும் ஜோடியாக வைத்து 3 திரைப்படத்தை இயக்கினார்.

படம் ஆரம்பத்திலிருந்தே தனுஸ்-ம் ஸ்ருதியும் காதல் வயப்பட்னர். 3 படம் வெளியாகிய பின்னும் இவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவிற்கு தெரியாமல் ரகசியமாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கிட்ட தட்ட ஸ்ருதிஹாசன் அவர் அம்மாவை போலவே கல்யாணம் செய்யாமலே தனுஷ்டன் குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் தனுஷ் ஐஸ்வர்யாவை டைவர்ஸ் செய்யும் அளவிற்கு சென்றுள்ளார் என்பது நமக்கு இதுவரை தெரிந்த விஷயம். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஜினிகாந்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலால் மனவேதனையின் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன் ஒரு நபர் (பெயர் வெளியிடப்படவில்லை) சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகார் செய்துள்ளார். அது பின்வருமாறு,
ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவை ரஜினிகாந்த் முதலில் எனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறும் சமயத்தில், கஷ்தூரிராஜாவின் குடும்பம் இடையில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டது. ரஜினியும் மனம் மாறி தனுசுக்கு தன் மகளை திருமணம் செய்துவைத்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் என்னை ஏமாற்றி விட்டார். இதை பற்றி வெளியில் யாருக்கும் சொல்லவேண்டாம் என என்னை வார்த்தையால் கட்டி போட்டு விட்டார். அவருக்கு மதிப்பளித்து இதுநாள் வரை நான் யாரிடமும் இதைப் பற்றி கூறவில்லை.

ஆனால் என்னால் ஐஸ்வர்யாவை இதுவரையிலும் மறக்க முடியவில்லை நான் இன்னும் அவரை காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்க்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர் ஐஸ்வர்யாவை மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளார் , இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் பொருத்தமானவர் அல்ல எனவே என் ஐஸ்வர்யாவை என்னுடனே சேர்த்து வையுங்கள்.
இவ்வாறு புகார் மனுவை கமிஷ்னரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கமிஷ்னர் இதை வாங்க மறுத்ததோடு வெளியில் மீடியாவிற்கு செல்வதற்குள் அவரை மன நலம் பாதிக்கபட்டவர் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் விஷயம் அரசல் புரசலாக வெளியில் கசிய துவங்கியுள்ளது.

Show commentsOpen link

[Continue reading...]

கமிஷனர் அலுவலகம் சென்ற நஸ்ரியா (புகைப்பட தொகுப்பு) nasriya complaint to commissinor

- 0 comments

கமிஷனர் அலுவலகம் சென்ற நஸ்ரியா (புகைப்பட தொகுப்பு)

by abtamil

இயக்குனர் சற்குணம் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நஸ்ரியா.
வேறு பெண்ணின் தொப்புளோடு தன் தலையை ஒட்ட வைத்து படமெடுத்துவிட்டார் என இயக்குனர் சற்குணம் மீது புகார் கூறி வந்த நஸ்ரியா, அடுத்து இதே புகாரை சென்னை பொலிஸ் கமிஷனரிடமும் இன்று பிற்பகல் கொடுத்துள்ளார்.

அதில், நய்யாண்டி படத்தில் தனுஷுடன் காதல் காட்சியில் நடித்த போது க்ளோஸ் அப்பில் தொப்புள் தெரிகிற மாதிரி ஒரு காட்சி இருந்ததாம்.

அதில் வேறு பெண்ணை வைத்து தொப்புள் காட்சியை மட்டும் எடுத்துவிட்டு, அந்த உடலோடு நஸ்ரியாவின் தலையை கிராபிக்ஸில் பொருத்திவிட்டார்களாம்.

விடயம் தெரிந்ததும் கொந்தளித்துவிட்ட நஸ்ரியா, இதை பெரிய விடயமாக்கி நடிகர் சங்கத்தில் புகார் தந்துவிட்டார்.

அவர்களோ சமாதான முயற்சியில் இறங்க, நஸ்ரியா அதற்கெல்லாம் ஒத்துவராமல் இப்போது விடயத்தை கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு போய்விட்டாராம்.

இதனைத் தொடர்ந்து தன்னை மோசடி செய்துவிட்டதாகக் கூறி, இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் தந்துள்ளார்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு அவர் கமிஷனர் அலுவலகத்துக்கு வருவது தெரிந்ததும், ஏராளமான ஊடகவியாலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்துவிட்டனர்.

புகார் கொடுத்துவிட்டு, பின்பு ஊடகவியாலரை சந்தித்து தன் புகாரை விபரமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார் நஸ்ரியா.

Show commentsOpen link

[Continue reading...]

கவர்ச்சிக்கு மாறும் நடிகை சமந்தா samantha in glamour roll

- 0 comments

கவர்ச்சிக்கு மாறும் நடிகை சமந்தா

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...

நடிகை சமந்தா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். பொது நிகழ்ச்சிகளுக்கு அரைகுறை ஆடையில் வருகிறார். சக நடிகைகள் போட்டியை சமாளிக்க படங்களிலும் கவர்ச்சிக்கு சம்மதித்து உள்ளார்.
தற்போது 'ஆட்டோ நகர் சூர்யா', 'மனம்' போன்ற தெலுங்கு படங்களில் சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களில் கவர்ச்சியாக தோன்ற போகிறாராம்.

நடிகைகள் சுருதிஹாசன், ஹன்சிகா, டாப்சி, அனுஷ்கா போன்றோர் தூக்கலாக கவர்ச்சி காட்டுகிறார்கள். 'டூயட்' பாடல்களிலும் நெருக்கம் காட்டுகிறார்கள். சமந்தா இதுபோன்று நடிக்க மறுத்து வந்தார். இதனால் படங்கள் குறைந்தது. இதையடுத்து கவர்ச்சியாக நடிப்பது என்று மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு கால்கள் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்து பார்வையாளர்களை பரபரக்க வைத்தார்.

The post கவர்ச்சிக்கு மாறும் நடிகை சமந்தா appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

மீண்டும் நஸ்ரியா- ஆர்யாவின் அசுவாரஸ்ய முடிவு aarya and nasriya

- 0 comments

மீண்டும் நஸ்ரியா- ஆர்யாவின் அசுவாரஸ்ய முடிவு

by admin
TamilSpyToday,

ஆர்யா பெண்களிடம் மட்டும்தான் ஃபிரண்ட்லியாக இருப்பார் என்கிற பொதுமக்களின் இமேஜை ராஜா ராணி படத்தின் சக்சஸ் மீட்டில் பொய்யாக்கினார் அப்படத்தின் எடிட்டர் ரூபன்.

ஷுட்டிங் ஸ்பாட்ல எந்நேரமும் அரட்டையடிச்சுகிட்டேயிருப்போம். எப்ப பார்த்தாலும் சிரிச்சுகிட்டேயிருப்போம் என்று அந்த சம்பவங்களை விவரித்துக் கொண்டே சிரிக்க ஆரம்பித்தார். அது பிரஸ்மீட் என்பதையும் மறந்து சிரித்துக் கொண்டேயிருந்தார்கள் இருவரும்.

ஆர்யா பேசும்போது, நான் எங்க எடிட்டரை எடிட்டர்னே சொல்ல மாட்டேன். கெடிட்டர்னுதான் சொல்லுவேன். ஏன்னா எந்த சீன் எடுத்துட்டுப் போனாலும், இது நல்லாயில்ல என்று துக்கி போட்டுவிடுவார். அவரை திருப்தி படுத்துவது என்பது அவ்வளவு சாதாரண காரியமில்ல என்றார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்காக இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறாராம் ராஜா ராணி இயக்குனர் அட்லீ. அதிலும் ஆர்யாதான் ஹீரோ. நயன்தாராவை நடிக்க வைத்துவிடலாம் என்று முயற்சித்த அட்லீக்கு பெருத்த ஏமாற்றம். நமக்கு இப்போ ஐடியா இல்ல என்று கூறிவிட்டாராம் அவர். மறுபடியும் ஆர்யாவும் நஸ்ரியாவும்தான் ஜோடி சேர்வார்கள் போலிருக்கிறது.

Show commentsOpen link

[Continue reading...]

ஆந்திராவில் வன்முறை நீடிப்பு: ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆலோசனை Andhra pradesh violence continue

- 0 comments

ஆந்திராவில் வன்முறை நீடிப்பு: ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆலோசனை Andhra pradesh violence continue

Tamil NewsToday,

ஐதராபாத், அக். 8–

தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ராயல சீமா, கடலோர ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று ஐதராபாத்தில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும், டெல்லியில் ஆந்திரா பவனில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களது கட்சித் தொண்டர்களின் தொடர் போராட்டங்களால் சீமாந்திராவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீமாந்திராவில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இன்னமும் போக்குவரத்து சீராகவில்லை. ரெயில்களும் ஓடவில்லை. பெரும்பாலான அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

ஆந்திர மாநில மின் உற்பத்தி மற்றும் மின் வினியோக நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருவதால் சீமாந்திராவில் இன்று (செவ்வாய்) மூன்றாவது நாளாக மின்சாரம் தடைபட்டுள்ளது. 13 மாவட்டங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

விசாகப்பட்டினம், ராஜமுந்திரியில் இன்று 100 சதவீதம் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. விஜயவாடாவில் 50 சதவீதம் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதையடுத்து மின் ஊழியர்கள், அரசு ஊழியர்களுடன் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி நாளை (புதன்) பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மின்சாரம் இல்லாததால் 13 மாவட்டங்களிலும் குடிதண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்குரிய எல்லா நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதற்கிடையே சீமாந்திராவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக தென் மாநிலங்களுக்கிடையிலான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ் நாடு, கர்நாடகாவிற்கான சரக்கு பரிமாற்றங்கள் ஸ்தம்பித்துள்ளது. இதனால் சீமாந்திரா போராட்டத்தின் பாதிப்பு மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டியின் உடல் நலம் உண்ணாவிரதத்தால் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சீமாந்திராவில் கொந்தளிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 13 மாவட்டங்களிலும் சட்டம் – ஒழுங்கு கட்டுப்படுத்த முடியாதபடி மாறி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே சந்தித்து பேசினார். சீமாந்திராவில் நடக்கும் போராட்டம் பற்றி அவர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர்.

தேவைப்படும் பட்சத்தில் ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியை முடக்கிவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா என்று அவர்கள் ஆலோசித்தனர். 4 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் பேசினார்கள்.

சீமாந்திரா பகுதி மக்களின் மனம் கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது பற்றியும் அவர்கள் பேசினார்கள். போராட்டத்தை வேறு எந்தெந்த வகைகளில் ஒடுக்குவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

ஜெகன்மோன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு இருவரையும் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுப்பது பற்றியும் மன்மோகன்சிங், சுஷில்குமார் ஷிண்டே ஆலோசனை செய்தனர். இதன்மூலம் ஆந்திராவில் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிரமாகி வருவது தெரிகிறது.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger