கமிஷனர் அலுவலகம் சென்ற நஸ்ரியா (புகைப்பட தொகுப்பு)
by abtamil
இயக்குனர் சற்குணம் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நஸ்ரியா.
வேறு பெண்ணின் தொப்புளோடு தன் தலையை ஒட்ட வைத்து படமெடுத்துவிட்டார் என இயக்குனர் சற்குணம் மீது புகார் கூறி வந்த நஸ்ரியா, அடுத்து இதே புகாரை சென்னை பொலிஸ் கமிஷனரிடமும் இன்று பிற்பகல் கொடுத்துள்ளார்.
அதில், நய்யாண்டி படத்தில் தனுஷுடன் காதல் காட்சியில் நடித்த போது க்ளோஸ் அப்பில் தொப்புள் தெரிகிற மாதிரி ஒரு காட்சி இருந்ததாம்.
அதில் வேறு பெண்ணை வைத்து தொப்புள் காட்சியை மட்டும் எடுத்துவிட்டு, அந்த உடலோடு நஸ்ரியாவின் தலையை கிராபிக்ஸில் பொருத்திவிட்டார்களாம்.
விடயம் தெரிந்ததும் கொந்தளித்துவிட்ட நஸ்ரியா, இதை பெரிய விடயமாக்கி நடிகர் சங்கத்தில் புகார் தந்துவிட்டார்.
அவர்களோ சமாதான முயற்சியில் இறங்க, நஸ்ரியா அதற்கெல்லாம் ஒத்துவராமல் இப்போது விடயத்தை கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு போய்விட்டாராம்.
இதனைத் தொடர்ந்து தன்னை மோசடி செய்துவிட்டதாகக் கூறி, இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் தந்துள்ளார்.
இன்று பிற்பகல் 12 மணிக்கு அவர் கமிஷனர் அலுவலகத்துக்கு வருவது தெரிந்ததும், ஏராளமான ஊடகவியாலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்துவிட்டனர்.
புகார் கொடுத்துவிட்டு, பின்பு ஊடகவியாலரை சந்தித்து தன் புகாரை விபரமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார் நஸ்ரியா.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?