மீண்டும் நஸ்ரியா- ஆர்யாவின் அசுவாரஸ்ய முடிவு
by admin
TamilSpyToday,
ஆர்யா பெண்களிடம் மட்டும்தான் ஃபிரண்ட்லியாக இருப்பார் என்கிற பொதுமக்களின் இமேஜை ராஜா ராணி படத்தின் சக்சஸ் மீட்டில் பொய்யாக்கினார் அப்படத்தின் எடிட்டர் ரூபன்.
ஷுட்டிங் ஸ்பாட்ல எந்நேரமும் அரட்டையடிச்சுகிட்டேயிருப்போம். எப்ப பார்த்தாலும் சிரிச்சுகிட்டேயிருப்போம் என்று அந்த சம்பவங்களை விவரித்துக் கொண்டே சிரிக்க ஆரம்பித்தார். அது பிரஸ்மீட் என்பதையும் மறந்து சிரித்துக் கொண்டேயிருந்தார்கள் இருவரும்.
ஆர்யா பேசும்போது, நான் எங்க எடிட்டரை எடிட்டர்னே சொல்ல மாட்டேன். கெடிட்டர்னுதான் சொல்லுவேன். ஏன்னா எந்த சீன் எடுத்துட்டுப் போனாலும், இது நல்லாயில்ல என்று துக்கி போட்டுவிடுவார். அவரை திருப்தி படுத்துவது என்பது அவ்வளவு சாதாரண காரியமில்ல என்றார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்காக இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறாராம் ராஜா ராணி இயக்குனர் அட்லீ. அதிலும் ஆர்யாதான் ஹீரோ. நயன்தாராவை நடிக்க வைத்துவிடலாம் என்று முயற்சித்த அட்லீக்கு பெருத்த ஏமாற்றம். நமக்கு இப்போ ஐடியா இல்ல என்று கூறிவிட்டாராம் அவர். மறுபடியும் ஆர்யாவும் நஸ்ரியாவும்தான் ஜோடி சேர்வார்கள் போலிருக்கிறது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?