Tuesday, 8 October 2013

ஆந்திராவில் வன்முறை நீடிப்பு: ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆலோசனை Andhra pradesh violence continue

ஆந்திராவில் வன்முறை நீடிப்பு: ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆலோசனை Andhra pradesh violence continue

Tamil NewsToday,

ஐதராபாத், அக். 8–

தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ராயல சீமா, கடலோர ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று ஐதராபாத்தில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும், டெல்லியில் ஆந்திரா பவனில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களது கட்சித் தொண்டர்களின் தொடர் போராட்டங்களால் சீமாந்திராவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீமாந்திராவில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இன்னமும் போக்குவரத்து சீராகவில்லை. ரெயில்களும் ஓடவில்லை. பெரும்பாலான அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

ஆந்திர மாநில மின் உற்பத்தி மற்றும் மின் வினியோக நிறுவன ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருவதால் சீமாந்திராவில் இன்று (செவ்வாய்) மூன்றாவது நாளாக மின்சாரம் தடைபட்டுள்ளது. 13 மாவட்டங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

விசாகப்பட்டினம், ராஜமுந்திரியில் இன்று 100 சதவீதம் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. விஜயவாடாவில் 50 சதவீதம் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதையடுத்து மின் ஊழியர்கள், அரசு ஊழியர்களுடன் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி நாளை (புதன்) பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மின்சாரம் இல்லாததால் 13 மாவட்டங்களிலும் குடிதண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்குரிய எல்லா நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இதற்கிடையே சீமாந்திராவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக தென் மாநிலங்களுக்கிடையிலான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ் நாடு, கர்நாடகாவிற்கான சரக்கு பரிமாற்றங்கள் ஸ்தம்பித்துள்ளது. இதனால் சீமாந்திரா போராட்டத்தின் பாதிப்பு மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டியின் உடல் நலம் உண்ணாவிரதத்தால் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சீமாந்திராவில் கொந்தளிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 13 மாவட்டங்களிலும் சட்டம் – ஒழுங்கு கட்டுப்படுத்த முடியாதபடி மாறி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கை உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே சந்தித்து பேசினார். சீமாந்திராவில் நடக்கும் போராட்டம் பற்றி அவர்கள் நீண்ட நேரம் விவாதித்தனர்.

தேவைப்படும் பட்சத்தில் ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியை முடக்கிவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா என்று அவர்கள் ஆலோசித்தனர். 4 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் பேசினார்கள்.

சீமாந்திரா பகுதி மக்களின் மனம் கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது பற்றியும் அவர்கள் பேசினார்கள். போராட்டத்தை வேறு எந்தெந்த வகைகளில் ஒடுக்குவது என்பது பற்றியும் விவாதித்தனர்.

ஜெகன்மோன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு இருவரையும் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுப்பது பற்றியும் மன்மோகன்சிங், சுஷில்குமார் ஷிண்டே ஆலோசனை செய்தனர். இதன்மூலம் ஆந்திராவில் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிரமாகி வருவது தெரிகிறது.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger