ரஜினி மகளின் முதல் மாப்பிளை நான்தான் – புதிய சர்ச்சையால் பரபரப்பு
by admin
TamilSpyYesterday,
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் சிம்புவை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி பின்னர் 2004 நவம்பர் மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன் நடிகர் தனுஷ்-யை கல்யாணம் செய்து கொண்டார். இருவரும் திருமணமான ஆரம்பகாலத்தில் மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் குடும்பம் நடத்தினார். ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப வாழ்கையில் புயல் வீச துவங்கியுள்ளது. ஐஸ்வர்யா, தனுஷ் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரையும் ஜோடியாக வைத்து 3 திரைப்படத்தை இயக்கினார்.
படம் ஆரம்பத்திலிருந்தே தனுஸ்-ம் ஸ்ருதியும் காதல் வயப்பட்னர். 3 படம் வெளியாகிய பின்னும் இவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவிற்கு தெரியாமல் ரகசியமாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கிட்ட தட்ட ஸ்ருதிஹாசன் அவர் அம்மாவை போலவே கல்யாணம் செய்யாமலே தனுஷ்டன் குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் தனுஷ் ஐஸ்வர்யாவை டைவர்ஸ் செய்யும் அளவிற்கு சென்றுள்ளார் என்பது நமக்கு இதுவரை தெரிந்த விஷயம். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஜினிகாந்துக்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவலால் மனவேதனையின் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஒரு நபர் (பெயர் வெளியிடப்படவில்லை) சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகார் செய்துள்ளார். அது பின்வருமாறு,
ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவை ரஜினிகாந்த் முதலில் எனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தார் அதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறும் சமயத்தில், கஷ்தூரிராஜாவின் குடும்பம் இடையில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டது. ரஜினியும் மனம் மாறி தனுசுக்கு தன் மகளை திருமணம் செய்துவைத்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் என்னை ஏமாற்றி விட்டார். இதை பற்றி வெளியில் யாருக்கும் சொல்லவேண்டாம் என என்னை வார்த்தையால் கட்டி போட்டு விட்டார். அவருக்கு மதிப்பளித்து இதுநாள் வரை நான் யாரிடமும் இதைப் பற்றி கூறவில்லை.
ஆனால் என்னால் ஐஸ்வர்யாவை இதுவரையிலும் மறக்க முடியவில்லை நான் இன்னும் அவரை காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்க்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர் ஐஸ்வர்யாவை மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளார் , இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் பொருத்தமானவர் அல்ல எனவே என் ஐஸ்வர்யாவை என்னுடனே சேர்த்து வையுங்கள்.
இவ்வாறு புகார் மனுவை கமிஷ்னரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கமிஷ்னர் இதை வாங்க மறுத்ததோடு வெளியில் மீடியாவிற்கு செல்வதற்குள் அவரை மன நலம் பாதிக்கபட்டவர் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் விஷயம் அரசல் புரசலாக வெளியில் கசிய துவங்கியுள்ளது.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?