அப்பாவி, நல்லவன், வில்லன்: கோச்சடையானில் '3 முகம்' காட்டும் ரஜினி
by abtamil
சென்னை: கோச்சடையான் படத்தில் ரஜினி 3 வேடங்களில் நடித்துள்ளார். அதில் வில்லத்தனம் செய்யும் வேடத்தில் ரஜினி பட்டையை கிளப்பியிருக்கிறாராம். கோச்சடையான் படத்தில் அப்பா, மகன் என்று 2 வேடத்தில் ரஜினி நடித்துள்ளார் என்றே செய்திகள் வந்தன. இந்நிலையில் அப்படத்தில் ரஜினி அப்பா, மகன்கள் என்று 3 வேடத்தில் நடித்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. மூன்று முகம் படத்திற்கு பிறகு ரஜினி இந்த படத்தில் 3 கெட்டப்பில் வருகிறார்.
அப்பாவி அப்பா அப்பா வேடத்தில் வரும் ரஜினி மிகவும் அப்பாவியாக இருப்பாராம். அப்பா ரஜினிக்கு ஷோபனாக ஜோடியாக நடித்துள்ளார்.
நல்ல மகன் 2 மகன்களில் ஒரு மகன் அர்ஜுனன் போன்று எண்ணம் கொண்ட நல்லவனாக இருப்பாராம். அவருக்கு தான் தீபிகா ஜோடியாம்.
கெட்ட மகன் மற்றொரு மகன் துரியோதனன் போன்ற குணமுள்ள வில்லனாக இருப்பாராம். வில்லனுக்கு ஜோடி இருக்கிறதா இல்லையா என்பதை ரகசியமாக வைத்துள்ளார்களாம்.
தூள் கிளப்பிய ரஜினி வில்லன் மகன் வேடத்தில் ரஜினி பட்டையை கிளப்பியுள்ளாராம். வில்லனாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?