vin kathai
தமிழ்த்திரையுலகில் தன் சுண்டியிழுக்கும் காந்தக் கண்களாலும், கட்டழகாலும் கவர்ச்சிக் கொடியை பறக்க விட்டு ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டிருந்த நடிகை சில்க்ஸ்மிதாவின் நிஜவாழ்க்கை பல சோகங்களையும், சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியது. இளம் வயதிலேயே அவருக்கு ஏற்பட்ட ‘தற்கொலை’ என்ற மிக மோசமான முடிவு இன்னும் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத விஷயமாகவே இருக்கிறது.
சில்க்ஸ்மிதாவை முதல் முறையாக
மலையாளத் திரையுலகில் அறிமுகப்படுத்திய டைரக்டர் ஈஸ்ட்மென் ஆண்டனி தான்
இந்த படத்திற்கு ஸ்டோரி எழுதியிருக்கிறார். மலையாளத் திரையுலகின் பிரபலமான
டைரக்டரும், கதாசிரியருமான ஆண்டனி பல படங்களில் அவருடன் இணைந்து
பணியாற்றியதுடன், சில்க்ஸ்மிதாவின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.
அவர் கதை எழுதியிருப்பதாலேயே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூர் டென்னிஸின் பரபரப்பான திரைக்கதையில் உருவான இந்த படத்தை பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல டைரக்டர் அனில் உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார். இது அவருக்கு 38-வது படம்.
இதில் சில்க்ஸ்மிதாவாகவே வருகிறார் ஷனாகான். சிம்புவின் ‘‘சிலம்பாட்டம்’’ படத்தில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர் ‘‘வேர் இஸ் த பார்ட்டி... எங்க வூட்ல பார்ட்டி’’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டதன் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார்.
தற்போது சல்மான்கானுடன் ‘‘மென்டல்’’ என்ற ஹிந்திப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷனாகான் ‘‘நடிகையின் டைரி’’யில் நடிப்பில் மட்டுமல்ல கவர்ச்சியிலும் வெளுத்துக் காட்டியிருக்கிறாராம்.
அரவிந்த், சுரேஷ்கிருஷ்ணா,சுபின் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பென்ரி இன்னேஷியஸ் மற்றும் எஸ்.பி.வெங்கடேஷ் ஆகியோர் இசையமைக்க, சஜித்மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஹிந்தியில் வெளியாகி வசூலில் சைக்கை போடு போட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தின் மலையாள வெர்ஷனின் தமிழ் டப்பிங் தான் இந்த நடிகையின் டைரி.